சிரிப்பு செய்திகள்

சிரிப்பு செய்திகள் வாசிப்பது வாரணாசி வாழவந்தான் 

இன்றைய மொக்கை செய்திகள்:
இந்தியா டல்லரசு ஆக பாடுபடுவேன்-பிதற்றுகிறார் ஜனாதிபதி ஜவாப் முகர்ஜி 
இந்தியர்களை போல் இளிச்சவாயர்கள் எவரும் இல்லை - புகழ்கிறார் டுபுக்கு டுபாமா
பத்தாம் வகுப்பு தேர்வில் தன்னை விட அதிக மதிப்பெண் எடுத்த மகனை அடித்து துவைத்தார் தந்தை
அரிசிக்கடை அண்ணாச்சியுடன் அறுபது வயது அப்புச்சி ஓட்டம்-அப்புச்சியின் ஹஸ்பன்ட் பதட்டம் 
பெட்ரோல் விலை உயர்வால் தங்கள் நிலை உயர்ந்தது - மகிழ்கிறார்கள் சைக்கிள் தயாரிப்பாளர்கள் 
மின்வெட்டால் எங்கள் வாழ்வில் வெளிச்சம்.தமிழக அரசுக்கு நன்றி கூறும் தமிழ்நாடு திருடர்கள் சங்கம் 
டைட்டானிக்:3 - பவர் ஸ்டாருடன் ஜோடி சேரும் பரவை முனியம்மா.  
கோலி குண்டில் கோல்ட் மெடல் வெல்வேன் - சபதம் செய்கிறார் குஜால் சிங்க்

இனி சுரிவான செய்திகள்:
13வது ஜனாதிபதியாக பொறுப்பேற்றுள்ள ஜவாப் முகர்ஜி,நேற்று பாஸ்மதி பவனில் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் அமெரிக்காவுக்கு அம்ப்ரெல்லா பிடித்து,இலங்கைக்கு இடியாப்பம் குடுத்து,சீனாவுக்கு சிக்னல் குடுத்து இந்தியாவிற்கு நெருக்கடி அமைத்து,இந்தியா மக்களின் பொருளாதாரத்தையும்,வாழ்வாதாரத்தையும் குலைத்து மொத்தத்தில் இந்தியாவுக்கு குல்லா குடுத்து இந்தியா வை டல்லரசு ஆக்க பாடுபடுவேன் என்று உறுதிமொழி எடுத்துள்ளார்.

அமெரிக்கா அதிபர் டுபுக்கு டுபாமா அவர்கள் இந்தியாவையும்,இந்தியர்களையும் புகழ்ந்து தள்ளி உள்ளார்.அவர் கூறியதாவது "ஜாப்புக்காக ஆப்பு வாங்குவதிலும்,மப்புக்காக ஆப வாங்குவதிலும்..இந்தியர்கள் காட்டும் ஆர்வம் அமேசிங்.எந்த நாடு அடித்தாலும் சரி,எவ்வளவு அடித்தாலும் தாங்கும் ஒரே இரும்பு இதயம் கொண்ட நாடு இந்தியா தான்.ஐ லவ் இந்தியா.இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே உள்ள உறவு பாலத்தில் பாம் வைப்பதில் அமெரிக்கா என்றும் முனைப்போடு செயல்படும்" என்று கூறியுள்ளார்.

பத்தாம் வகுப்பு தேர்வில் தன்னை விட அதிக மதிப்பெண் எடுத்ததால் மகனை பெண்டேடுத்தார் தந்தை.கும்மிடிபூண்டியை சேர்ந்தவர் குப்புசாமி.இவரது மகன் அப்புசாமி.கும்மிடிபூண்டியில் உள்ள டுபாகூர் மெட்ரிகுலேஷன் பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கிறார்.அவர் நடந்து முடிந்த பத்தாம் வகுப்பு தேர்வில் 879 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.அவர் தந்தை குப்புசாமியோ 618       மதிப்பெண்கள் தான் எடுத்தார்.தன்னை விட மட்டமாக படித்தும் தன்னைவிட அதிக மதிப்பெண் எடுத்ததால் கோபம் கொண்டு  மகனை குமுறி புட்டார் குப்புசாமி.குமுறின குப்புசாமி சைதாப்பேட்டை ஜெயிலிலும்,குத்து வாங்கின அப்புசாமி ராயபேட்டை மருத்துவமனையிலும் உள்ளனர்.

அண்ணாச்சியுடன் ஓடிய அப்புச்சி.அமிஞ்சிகரைல அரிசிக்கடை வைத்துருப்பவர் அண்ணாச்சி.அதே தெருவில் இட்லி கடை வைத்துருப்பவர் அப்புச்சி.இட்லிக்கு அரிசி வாங்கும்போது காசோடு மனசையும் பறிகுடுத்த அப்புச்சி,ஒரு நல்ல நாளில் நாள் நட்சத்திரம் பார்த்து,அண்ணாச்சி கரம் பிடித்து ஓடிவிட்டார்.இதனால் தனக்கு கிடைத்த இட்லியும்,இட்லி கட காசும் இனி கிடைக்காதே.வட போச்சே என்று வருந்துகிறார் அப்புச்சி ஹஸ்பன்ட்.

பெட்ரோல் உயர்வால் மகிழ்ச்சியாகும் சைக்கிள் தயாரிப்பாளர்கள்.நாடு முழுவதும் உயர்த்தப்பட்டுள்ள பெட்ரோல் உயர்வால் மக்கள் கார்,பைக் உபயோகிப்பதை குறைத்து சைக்கிள் உபயோகிப்பதால் தங்கள் நிலை உயர்ந்துள்ளதாக சைக்கிள் தயாரிப்பாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.அதே போல்,உபயோகமற்ற கார்,பைக் போன்ற வண்டிகளால் பழைய ஈயம் பித்தாளை,இரும்பு சாமானுக்கு பேரிச்சம் பழம் விற்கும் வியாபாரமும் பெருகி உள்ளது.இதனால் பேரிச்சம் பழம் விளைச்சலும் அமோகமாய் இருப்பதாக வியாபாரிகள் கூறுகின்றனர்.

மின்வெட்டால் வெளிச்சம் அடைந்த திருடர்கள்.தமிழகத்தில் நிலவும் மின்வெட்டால் எளிய முறையில் பல இடங்களில் திருட முடிகிறது.இதனால் எங்கள் வாழ்வில் வசந்தமும்,வெளிச்சமும் வந்துள்ளது.இதற்காக தமிழக அரசுக்கும்,தமிழக மின்சார வாரியத்துக்கும் நாங்கள் கடமை பட்டுள்ளதாக தமிழ்நாடு திருடர்கள் சங்கம் நன்றி தெரிவித்துள்ளது.மேலும்,இதே மாதிரியான மின்வெட்டை மற்ற மாநிலங்களிலும் அமுல்படுத்தி எங்கள் தொழிலை விரிவுபடுத்த உதவுமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

பவருடன் பரவை.டைட்டானிக் படத்தின் மூன்றாம் பாகத்தை இயக்குகிறார் இயக்குனர் இம்சை பேரரசு.இதற்கான நடிகர் தேர்வில் பல மாதங்கள் முக்கி முனகி இறுதியில் வெள்ளிவிழா நாயகனும்,நடிப்பு புயலும் ஆனா பவர் ஸ்டார்  டாக்டர்.சீனிவாசனையும்,அவருக்கு ஜோடியாக மயக்கும் கட்டழகி,மாடர்ன் பொட்டழகி பரவை முனியம்மாவும் தேர்ந்தெடுத்துள்ளார்.இவர்களின் நவரசம் பொழியும் நாராசமான நடிப்பில் காதல் காவியமாய் உருவாகிறது டைட்டானிக் என்று பேரரசு கூறி உள்ளார்.இப்படத்துக்கு காமேரமேன்னாக குமரி முத்துவும்,இசை அமைப்பாளாராக ஸ்ரீகாந்த் தேவா அவர்களும் பணியாற்றுகின்றனர்.

கோலி குண்டில் கோல்ட் மெடல்.வர போகின்ற ஒலிம்பிக் போட்டிகளில் கோலி குண்டு ஆட்டத்தில் இந்தியா சார்பில் பங்குபெறும் குஜால் சிங்க் கூறியது என்னவென்றால் "இந்த ஒலிம்பிக்கில் கோலி குண்டில் கோல்ட் மெடல் வாங்கி இந்தியாவுக்கு பெருமை சேர்ப்பேன்.ஒலிம்பிக் போட்டிக்கான தகுதி சுற்றில் என் கோலியால் கோச் மண்டையை பிளந்த என் திறமையை கண்டு முன்னால் கோலி குண்டு சாம்பியன் கோலி கோபால் எனக்கு அவர் செலவில் கோலி சோடா வாங்கி குடுத்து ஊக்கப்படுத்தினார்.அவருக்கு என் வெற்றியை சமர்ப்பிப்பேன்" என்று கூறினார்.

பங்குச்சந்தை பற்றிய நிலவரம்:
ஈழத்தை அழிக்கும் முனைப்பில் இலங்கைக்கு ஆயுதம் விற்கும் வியாபாரம் அமோகமாக நடப்பதாலும் ,அதற்க்கு அமெரிக்கா,ஆப்கானிஸ்தான் உடன் தொழில் முறையில் ஏற்பட்ட லாபத்தாலும் இன்றைய பங்குச்சந்தை ஏறுமுகத்தில் ஏழரையை கூட்டி உள்ளது.

தங்கம்,வெள்ளி விலை பற்றிய நிலவரம்:
தங்க நகை விளம்பரத்தில் வரும் நடிகைகளை போல் தங்களுக்கு விளம்பரம் தேடிக்கொண்டு வீம்புக்கு வீணாய் போக  பல குடும்பத்தலைவிகள் கூட்டம் கூட்டமாய் நகைக்கடை நோக்கி படையெடுப்பதால் தங்கம் விலை தக்காளியை போல் பல மடங்கோடும்,பெட்ரோலை போல் வேகத்தோடும் அதிகரிக்கின்றன.

வெள்ளிக்கு வெள்ளிகிழமை மட்டும் அல்லாது அணைத்து கிழமைகளிலும் கூட்டம் கூடுவதால் வெள்ளி விலையும் விண்வெளி உசரத்துக்கு உயர்ந்துள்ளது.

(ஆயிரங்கள் கரைந்தாலும் ஆசைகள் கரைவதில்லை)

இத்துடன் இன்றைய மொக்கை செய்திகள் முடிவடைந்தன.மீண்டும் செய்திகள் பிறகு மொக்கை போடும்போது.நன்றி...வணக்கம்...

Comments

Popular posts from this blog

Support The Champs

MA(DAI)YAN CALENDER

நானா நீயா