நானா நீயா
அனைவருக்கும் வணக்கம்.ஊரில் உள்ள பிரச்சனைகளை,மக்கள் கண்ணோட்டத்தில்,அலசி,நனைத்து,பிழிந்து,துவைத்து இஸ்திரி போடும் இந்நிகழ்ச்சி "நானா நீயா".நான் உங்கள் குல்பிநாத்.இன்று நாம் அவ்வாறு அலச போகும் பிரச்சனை "சமுதாயத்தில் மரியாதை கெட்டவர் திருடனா அல்லது பிச்சைக்காரனா".
ரெண்டு தரப்புலயும் பார்த்தீங்கன்னா,போக்கிடமின்றி போஜனத்துக்கு யாசகம் கேட்டு வயது வரம்பின்றி,ஜாதி மத பேதமின்றி,சந்து பொந்து சச்சரவு இன்றி எங்கேயும்,எப்போதும் அயராமல்,அசராமல் பிச்சை எடுப்பவர்கள் இவர்கள்.இங்க பொழுதோடு விளையாடி,புறம்போக்கோடு உரையாடி,மக்களிடம் களவாடி காலத்தை ஓட்டும் கள்வர்கள் இவர்கள்.நீங்க சொல்லுங்க...
கொக்கி:நான்தான் கொக்கி குமார்.மீனம்பாக்கத்துல இருந்து மீனாட்சி காலேஜ் வரைக்கும் பல ஏரியால திருடுறேன் சார்.நேரம் காலம் பார்க்காம,பையையும்,கையையும் நம்பி பொழப்பு நடத்துறோம்.
பிச்சைமுத்து:நாங்க மட்டும் லேப்டாப்,ஐ-பேட் வச்சுகிட்டா பிச்சை எடுக்கிறோம். நாங்களும் வெத்துப்பை,வெறுங்கையுமா தான் பிச்சை எடுக்குறோம்.
கேடிமணி:அட,உங்கள மாதிரி உழைக்க வக்கில்லாம,ரோடு ஓரமா உக்காந்து பிச்சை எடுக்கிறவங்கள நாங்க.பல மாடி தாண்டி,பல ஜன்னலை உடைச்சு ...படி படிப்படியா ஏறி வந்துருக்கோம்.
குல்பிநாத்:இப்படி படிப்படியா உயர்ந்த இவங்க,கோவில் படிகளில் பிச்சை எடுக்கும் உங்களோடு எந்த வகையில் தரம் தாழ்ந்ததாக பீல் பண்றீங்க.
கந்தல் கணேஷ்:ஐயா,இவங்கள மாதிரி அடுத்தவங்களை கஷ்டபடுத்தி நாங்க வாழலைங்க.
கத்தி கபாலி:யாரு நாங்களா.எங்கள மாதிரி அடுத்தவங்களை கஷ்ட படுதாதவங்க யாருமேய் இல்லை.நீங்க எப்பவும் ஐயா,சாமி தர்மம் பண்ணுங்கன்னு கேவலமான குரல்ல ரோடு,கோவில்,வீடுன்னு பிச்சை கேட்டு இம்சை பண்ணுவீங்க.ஆனா நாங்க,தூங்குறவங்களை தொந்தரவு பண்ணாம சைலன்ட்ட போய் திருடிட்டு வருவோம்.
பிச்சைமுத்து:இப்போலாம் யாருயா அப்பா,அம்மான்னு சொல்லுறா.டாடி,மம்மி தான் சொல்றாங்க.ஆனா நாங்க ஐயா,அம்மான்னு சொல்றதால தான் இன்னும் தமிழ் நாட்டுல தமிழ் வாழுது.
கேடிமணி:தமிழ்நாட்டுல தமிழனே வாழ முடில.இதுல தமிழ் வாழ்ந்தா என்ன வாழாட்டி என்ன.அதோட,இவங்க சொல்ற அந்த "ஐயா"வும்,"அம்மா"வும் தான் வாழுறாங்க.அவங்களை சொல்ற இவங்க என்னத்த வாழ்ந்தாங்க சொல்லுங்க.
இதுக்கு நாங்களே பெட்டர்.சுயமா உழைச்சி சுய வேலைவாய்ப்பு திட்டத்தை அமுல் படுத்தி இருக்கோம்.
கத்தி கபாலி: அதோட பஸ்,பேங்க்,ஸ்கூல்,காலேஜ்,ஹாஸ்பிடல்னு பல இடத்துல நாங்க கஷ்டபடுறோம்.ஆனா இவங்க,கோவில்,தெருவீதில ஒரே இடத்துல உக்காந்து நோகாம நோன்பு கும்பிடுராணுக.இவனுகதான் மானம் கெட்ட பயலுக.ஓடி ஓடி உழைக்கனும்னு வாத்தியாரே பாடிருக்காரு.
கந்தல் கணேஷ்:அடுத்த வரிய பாட வேண்டித்தானே.ஊருக்கெல்லாம் குடுக்கணும்.ஊருல இருக்கிறதை எல்லாம் சுருட்டுரவங்கள்ள.அதான் விட்டுட்டானுக.
கேடிமணி:நாங்க என்னத்தையா சுருட்டுறோம்.அந்த அரசியல்வாதிக சுருட்டுறது போக மிச்சம் மீதி இருக்கிறது தான் எங்களது.
கந்தல் கணேஷ்:பார்த்தீங்களா சார்.இவனுக கொஞ்சம்,அவனுக கொஞ்சம்னு மாறி மாறி சுருட்டுனா நாங்க என்னத்த பண்றது,யாருகிட்ட போய் கேக்குறது.
கொக்கி குமார்:ரொம்ப பேசாத.ஒரு வகைல நீங்களும்,அரசியல்வாதிகளும் கூட ஒண்ணுதான்.அவங்க ஒட்டு கேட்டு பிச்சை எடுத்தா,நீங்க சோத்த கேட்டு பிச்சை எடுக்குறீங்க.
பிச்சைமுத்து:அவங்கள மாதிரி நாங்க ஒன்னும் அஞ்சு வருஷத்துக்கு ஒருவாட்டி பிச்சை எடுக்கலையே.தினம் தினம் பிச்சை எடுக்குறோம்.நாங்களாச்சும் பிச்சை மட்டும்தான்யா எடுக்குறோம்.அவனுக,மொத்தத்தையும் கேட்டு பிச்சி எடுப்பானுகலே.அவனுக மாதிரி நாங்க கிடையாது.
குல்பிநாத்:ஒரு சான் வயிற்றுக்காக,காசை கேட்டும்,திருடியும் வாழும் உங்கள் வாழ்க்கையில் நீங்கள் எதிர்கொள்ளும் துன்பங்கள் எப்படி பட்டவை.
கத்தி கபாலி:சார்,முன்னெல்லாம் திருட போனா பயந்து அடங்குவாணுக.ஆனா இப்போ இருக்கிற விலைவாசில,திருட போற எங்ககிட்டையே திருடுறானுக.பாதுகாப்பில்லாம தொழில் செய்றோம் சார்.
பிச்சைமுத்து:அப்போ போலீஸ் பந்தோ பஸ்தோட போய் திருட வேண்டித்தானே.நீங்க எல்லாம் ஒன்னுக்குள்ள ஒன்னுதானே.
கேடிமணி:நக்கலா,உங்களை பிடிச்சி போட்டா தெரியும். கண் முழிச்சு திருடிட்டு வர எங்களை புடிச்சி போட்டுறாணுக.அடிபட்டு,மிதிப்பட்டு வாழுறோம் சார்.
பிச்சைமுத்து:நாங்கமட்டும் என்னவாம்.சில பேரு பிச்சை கூட போடாம,அடிக்கிற வெயிலில்,அட்வைஸ் பண்றேன்னு அருப்பாணுக.காரி துப்புவாணுக.அதையெல்லாம் தாங்கிகிட்டு தான் தொழில் பண்றோம் சார்.
குல்பிநாத்:அடிபட்டு,மிதிப்பட்டு,பிறரால் அட்வைஸ் என்ற பேரில் கழுதருக்கபட்டு,காரி துப்பப்பட்டு என என்ன பாடு பட்டாலும் நேர் வழியில் உருப்பட மாட்டோம் என்ற கொள்கையில் கடைசி வரை உறுதியாய் இருக்கும் வரை இவர்களை விட இவர்கள் வாழும் சமுகத்துக்கு தான் மரியாதை இல்லாமல் போகும்.
மரியாதை அற்ற சமூகத்துக்கும்,அந்த சமுகத்தில் வாடும் மக்களுக்கும் என் மரியாதை அற்ற வணக்கம்.

அருமையாக இருந்தது நல்ல நகைச்சுவை நையாண்டி. வாழ்க வளர்க
ReplyDeleteஹா ஹா ஹா வயிறு வலிக்குது நண்பா.
ReplyDelete