நோ மணி நோ அனி

மணி:நோ மணி நோ அனி..நோ அனி நோ மணி டா...

அப்பு:என்னடா சம்பந்தமே இல்லாம என்னனமோ பாடுற..

மணி:சம்பந்தம் இருக்குடா..மணி னா நான்.அனி னா அனிதா.இப்போ புரிதா.மணி இல்லையேல் அணித இல்லை.அணித இல்லையேல் மணி இல்லை.எப்புடி...?

அப்பு:அருமை(கொடுமை)

மணி:ஹஹஹஹா..தேங்க்ஸ்.சரி,அவ வரலான்னு பாரு.

அப்பு:என்ன அவசரம்,அவ வரத்தான் இன்னும் 15 நிமிஷம் இருக்குள்ள.

மணி:இருக்குதான்.இருந்தாலும் மனசு பட படங்குது.நேத்து லவ் லட்டர் கொடுத்ததுல இருந்து கையும் ஒடலை,காலும் ஒடலை.

அப்பு:எனக்கு கூட வண்டியும் ஓடலை,வாட்ச்சும் ஓடலை.

மணி:ரெண்டுமே டப்பா தான்.ஓடுனா என்ன ஓடாட்டி என்ன..

அப்பு:ஒய்,என்ன நக்கலா...என் வண்டி,வாட்ச்  விட உன் கை,கால் பெருசா?

மணி:ஆமா,கால் இல்லன்னா வண்டி ஓட்ட முடியாது.கை இல்லைன்னா வாட்ச் கட்ட முடியாது.

அப்பு:ஒத்துகிறேன்.என்னைவிட நீ 10 மார்க் ஜாஸ்தியா வாங்குறேன்னு ஒத்துக்கிறேன்.

மணி:அது...

அப்பு:ஆனா அதுக்குன்னு நீ வாங்குறதே 15 மார்க் தான் என்பதை மறந்துடாத.

மணி:அஹ,சரிடா சரிடா..இப்போ அது ரொம்ப முக்கியமா.அவ வரளான்னு  பாருடான்னா  அதவிட்டுட்டு வெட்டிபேச்சு பேசிகிட்டு இருக்க.

அப்பு:நான் வெட்டிபேச்சு பேசுறேன்னா.மளிகை கடைக்கு போய்கிட்டு இருந்தவனை மடக்கி இங்க கூட்டிட்டு வந்து இப்போ வெட்டிபேச்சு பேசுறேன்னு அசிங்கபடுத்துரியா.நீயாச்சு,உன் காதலாச்சு போடா..

மணி:டேய்..டேய்..சும்மா பிகு பண்ணாதடா.என்னத்த வாங்குறதுக்கு மளிகை கடை போன சொல்லு?

அப்பு:பனங்கள்ளு.

மணி:ஹஹஹா..அத வாங்கவா போன.பணங்கள்ள வச்சு பங்களாவா கட்டபோற..

அப்பு:அஹ இவுரு மட்டும் காதலிச்சு காதல் கோட்டை கட்டபோராறு பாரு...

மணி:காதல் கோட்டை என்னடா.என் அனிதாக்காக தாஜ் மகாலே கட்டுவேன்.

அப்பு:முதல செமஸ்டர் பீஸ்ஸ  கட்டுடா..

மணி:ஏன் நீ கட்டுனா என்னவாம்.உனக்காக நான் ஸ்கூல்ல எத்தன வாட்டி உங்கப்பா கையெழுத்து போட்டு காப்பாத்தி இருக்கேன்.


அப்பு:எங்கப்பன் கையெழுத்து மட்டுமா போட்ட.உங்கப்பன் கையெழுத்தும் தான் போட்ட.என்னமோ எனக்காக மட்டும் போட்டா மாதிரியே பேசுறியே.

மணி:ஏன் நீ வராத டைம்ல உன் கையெழுத்துல கூட உனக்கு ஹோம் வொர்க் பண்ணிகொடுதேன்ல.அதுக்கு எல்லாம் காட்டுற நன்றிக்கடனா டா இது.

அப்பு:நண்பனுக்கு செஞ்சதை சொல்லிகாட்டுறியே...நல்ல நட்புக்கு அழகாடா இது.

மணி:அஹ,அசிங்கபடுத்துரதுக்குனே ஒரு நண்பன் டா.

அப்பு:நீ அசிங்கபட கூடாதுன்னு நினைக்குற நண்பன் டா.

மணி:ஆகா,நீ என் தளபதி டா..

அப்பு:நீ ஒரு தலைவலி டா.

மணி:இப்படியே நக்கலடிச்சிட்டு இரு.ஒரு நாள் இல்லை ஒருநாள் நான் பெரியா ஆளா வரத்தான் போறேன்.நீ பார்க்கத்தான் போற.

அப்பு:நீ பெரிய ஆளா வரயோ இல்லயோ,உன் பிரியமான ஆளு வருது பாரு.

மணி:வழிவிடு வழிவிடு வழிவிடு என் தேவி வருகிறாள்.

அப்பு:வெறும் தேவியா இல்லை பூலான் தேவியான்னு கொஞ்ச நேரத்துல தெரிஞ்சிடும்.

மணி:ஏண்டா இப்படி.நானே பதட்டத்துல என்ன பண்றதுன்னு தெரியாம இருக்கேன்.இவன் வேற.

(அனிதா அருகில் வந்து)

அனிதா:ஹாய்...

மணி,அப்பு:ஹாய்...

அனிதா:ரொம்ப நேரம் வெயிட் பண்ணுறீங்களா?

அப்பு:(ரொம்ப மாசமா வெயிட் பண்றான்..)

மணி:நோ,ஜஸ்ட் 10 மினிட்ஸ் தான் ஆச்சு.

அப்பு:(10 மினிட்ஸ்ஸா..எத்தன 10 மினிட்ஸ் பா)

அனிதா:உங்க டிரஸ் நல்லாருக்கு.

அப்பு:(டிரஸ் மட்டும் தான் நல்லாருக்கும்)

மணி:உங்களுக்கு பிடிச்சிருக்கா?

அப்பு:(பிடிச்சிருந்தா கைட்டி குடுக்கபோறியாக்கும்...)

அனிதா:ரொம்ப..

மணி:தேங்க்ஸ்..

அனிதா:நீங்களே பேசுறீங்க.இவுரு பேசமாட்டாரா?

அப்பு:(பேச விட்டதான்னே..)

மணி:அவனுக்கு கூச்சமுங்க,(அப்பு:எனக்கு கூச்சமா..கூச்சமே இல்லாம பொய் சொல்றான்),என்ன மாதிரி போல்ட்டா பேசமாட்டான்.

அனிதா:ஹிஹிஹி...பிடிச்சிருக்கு.

மணி:உண்மையாதான் சொல்றீங்களா?

அனிதா:ஹ்ம்ம்.ஆமா...எனக்கு பிடிச்சிருக்கு..

அப்பு:(என்னது சனியா?)

அனிதா:லெட்டர்ல இருந்த ஒவ்வொரு வார்த்தையும் பேசிச்சு.

அப்பு:(பேசுச்சா..ரைடிங்க ரெகார்டிங் பண்ணி அனுப்சிட்டானோ)

அனிதா:அதுல எனக்கு ரொம்ப பிடிச்சது மூணு விஷயம்.முதல் ஒன்னு,இதுவரை நாம் தாமரை பூவின்மேல் உள்ள நீராய் இருந்தோம்.இனி தாமரை பூவின் அடி வேராய் இருப்போம்.

அப்பு:(அடி வேரா இருக்குறீங்களோ இல்லையோ.அடி வாங்காமா இருந்த சரிதான்)

மணி:அடுத்தது என்ன?

அனிதா:றெக்கை முளைத்த பறவையை போல காதல் வானில் சிறகடித்து பறப்போம்.

அப்பு:(காஜா ஒயினில் சரக்கடிச்ச நாய் இப்போ காதல் வானில் சிறகடிக்கிதோ..கால கொடுமை டா..)

அனிதா:கடசியா,அன்பென்னும் சொல்லை அடை காக்குவோம்.அதற்க்கு நம்முள் புது உறவொன்றை உண்டாக்குவோம்.

அப்பு:(மேட்டர் தெரிஞ்சா ரெண்டு பேரையும் வெட்டி துண்டாக்கிடுவாங்கடி...)

மணி:ஒவ்வொன்னையும் ஆழமா ரசிச்சிருக்கீங்க.தேங்க்ஸ்.

அனிதா:ஆமா...மனசோட அடி ஆழத்தை தொட்டுடுச்சே..அதான்...

மணி:அதான்....?

அனிதா:அதான்...

மணி:அதான்...என்ன சொல்லுங்க

அனிதா:ஐ லவ் யு அப்பு....

மணி:என்னது அப்புவா....

அப்பு:நான்னா..(இது என்னடா குழப்பம்)எங்க அந்த லெட்டர காமி..என் கனவுலகில் பவனி வரும்..க....நு..நா..பு......ம....................இப்படிக்கு அப்பு....

அனிதா:ஆமா,லவ் லெட்டர் எழுதுனது நீங்கதான...இப்போ ஒன்னும் தெரியாத மாதிரி நடிக்கிறீங்க.ஹிஹிஹி,,இந்த கூச்சம் தான் எனக்கு பிடிச்சிருக்குன்னு சொன்னேன்.நீங்க பேசாதபோதும் உங்க லெட்டர் பேசிடிச்சு.ஐ லவ் யு அப்பு.

அப்பு:டேய் மணி...உண்மையிலையே நீதாண்டா என் தளபதி.அப்போபோட்ட கையெழுத்து எல்லாம் ஜுஜூபி டா.இப்போ போட்டா பாரு ஒரு கையெழுத்து,இது ஜிலேபி டா...கலக்கிட்ட மணி.

மணி:டேய்...

அனிதா:அப்பு,நம்ம காதல்ல எத்தன பிரச்சனை வந்தாலும்,கடைசி வரைக்கும் என்கூடவே இருப்பீங்கல்ல...

அப்பு:கவலையே படாத அனி..

மணி:அண்ணியா?

அப்பு:அண்ணி இல்லடா.அனி.அதாவது அனிதா என்பதை தான் அனின்னு செல்லமா சொன்னேன்டா..அனி டார்லிங்,நீ கவலைபடாதே..எத்தன பேர் வந்தாலும் சரி,எத்தன பிரச்சனை பண்ணலும் சரி..நாம ஒன்னாதான் இருப்போம்.அதையும் மீறி எதுவாச்சும் சிக்கல் னா,இருக்கவே இருக்கான் உன் அண்ணன்.

அனிதா:என் அண்ணன்னா,அது யாரு?

அப்பு:என்னப்பா..இப்படி கேட்டுட்டா..தோ நம்ம மணி தான்.நம்ம ரிஜிஸ்டர்  மேரேஜுக்கு கையெழுத்து போட போறதே நம்ம மணிதான்.

அனிதா:ரொம்ப சந்தோசம்.தேங்க்ஸ் மணின்னா...நீங்கதான் எங்களையும் எங்க காதலையும் வாழ வைக்கணும்.

ஆப்பு:வாழ வைக்கும் காதலுக்கு ஜெ..அந்த காதலையும் வாழ வைக்கும் மணிக்கு ஜெ..நண்பேண்டா...நோ மணி நோ அனி..நோ மணி நோ அனி  டா...

மணி:டேய் அப்பு..வச்சுட்டியேடா ஆப்பு...


Comments

  1. கதைகளில் முக்கியமாகக் கையாள வேண்டியது எடிட்டிங்...அது உங்களிடம் மிஸ்ஸிங்...ரெண்டே வரிகளில் முடிக்கக் கூடிய கதையை இவ்வளவு நீளமாக்க வேண்டியதில்லை...ஒரு யோசனை சொல்லட்டுமா? எந்தெந்த வரிகளை நீக்கினால் கதையின் மையக்கரு கலையாதோ அதையெல்லாம் நீக்குங்கள்...மிச்சமிருப்பது அழகான கதையாகவோ சிறுகதையாகவோ ஜோக்காகவோ கூட உருமாறலாம்...விமர்சனத்தில் பிழையிருப்பின் மன்னிக்கவும்...வளர வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. neenga sonnathu corect boss.aana idhai naan sirukathaikkaga eludhalai.ithai oru padamaagavo,oru padathin kaatchikka uruvaakkinathu.athaan ippadi.aana padamaaakkum bothu neenga sonnapadi sila paguthigalai kattaayam eduppen.inga pottathu oru padam paaartha feel kodukka thaan.athaan ippadi lengthya potten.anyhow,ungaloda akkaraiyaana vimarsanathukku santhosam nanbaa

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

Support The Champs

MA(DAI)YAN CALENDER

நானா நீயா