விஜய் - V20
நீ எதுவாக ஆக நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய்.- விவேகானந்தர் சொன்ன இந்த பழமொழிக்கு ஏற்றார் போல ரஜினியின் அண்ணாமலை வசனம் பேசி,எம்.ஜி.ஆரின் நாளை நமதே பாடலையே தன படத்தின் தலைப்பாய் கொண்டு அவர்களை போலவே மக்கள் ரசிக்கும் கதாநாயகனாக,இளைய தளபதியாக உருவெடுத்துள்ள விஜய் அவர்கள் இன்றுடன் திரையுலகிற்கு வந்து 20 வருடங்கள் ஆகின்றன.
வெள்ளித்திரைக்கு சம்பந்தம் இல்லாத பக்கத்துக்கு வீட்டு பையனின் முகத்தோடு வந்தவர் ஆரம்ப காலத்தில் சந்தித்தது அதிகபட்சம் அவமானம்.அதுதான் இன்று அவர் பிடித்திருக்கும் இடத்திற்காக அவுருக்கு கிடைத்த சன்மானம்.நடனம் ஆடதெரியாமல் ஏன் வந்தாய் என்ற அவமானத்துக்கு அவர் பெற்ற சன்மானம் இன்று அவரை போன்று நடனம் ஆட வேண்டும் என்று பலர் வியப்பதே.
தந்தையின் உதவியால் திரை பிரவேசம் தொடங்கினாலும்,தன சுய உழைப்பால் "பூவே உனக்காக" முலம் மறுபிரவேசம் எடுத்தார்.எந்த மூஞ்சியை கிண்டல் செய்தார்களோ அதே முகத்தை கொண்டு காதலுக்கு மரியாதை,லவ் டுடே,துள்ளாத மனமும் துள்ளும்,குஷி,பிரியமானவளே,பிரெண்ட்ஸ் என காதலும்,குடும்பபாங்கான படங்களில் நடித்து அணைத்து தரப்பு மக்களிடமும் பெயர் பெற்றார்.
செவாலியே சிவாஜி,உலகநாயகன் கமல் போல் நடிப்பின் நாயகனாக இல்லாது,சுறுசுறு சூர்யா போல்,விறுவிறு விக்ரம் போல் கதையின் நாயகனாக இல்லாது...ஆட்டம்,பாட்டம்,நகைச்சுவை,சண்டை என் பாமரர் முதல் பகட்டு வாழ்க்கை வாழும் நவநாகரிக மக்கள் வரை வயது வித்தியசாமின்றி அணைத்து தரப்பினராலும் ரசித்து,மகிழ்ந்து ஏற்றுகொள்ளப்பட்ட மக்களின் நாயகர்களான எம்.ஜி.ஆர்,ரஜினி போன்றோருக்கு அடுத்த இடத்தில தன அயராத உழைப்பாலும்,அழகான ஆட்டத்தாலும்,எளிமையான குணத்தாலும் அம்சமாய் அமர்ந்திருப்பவரே இளைய தளபதி விஜய்.
இன்றும் ஒரு தேசிய விருதோ,பிலிம்பேர் விருதோ வாங்கியதில்லை.ஆனால் பல தேசம் கடந்தும் இவுருக்கு ரசிகர்கள் உண்டு.வெற்றியில் தலை தூக்கியதும் இல்லை.தோல்வியில் தலை சாய்ந்ததும் இல்லை.காவலன்,நண்பன்,வேலாயுதம் போன்ற கடந்த சில படங்களில் மீண்டும் காதல்,குடும்பம் என கலக்கி இருந்தாலும்,இன்னும் அதிரடியில் தான் கில்லி தான் என்பதை "துப்பாக்கி" பட வெற்றியின் மூலம் அழுத்தமாய் நிருபித்துருக்கும் விஜய் அவர்கள் இதே போல் நடிப்புக்கும்,துடிப்புக்கும் தீனி போடும் படங்களில் நடித்து மேலும் பல வெற்றி வாகை சூடி இன்னும் பல ஆண்டுகள் அனைவரையும் மகிழ்விக்க வேண்டுமாறு கூறி மனமார வாழ்த்துகிறோம்.

Comments
Post a Comment