அம்மா (எ) உலகம்

தோழியே முதல் தோழியே 
உந்தன் அன்புக்கில்லை வேலியே..
காதலே முதல் காதலே
உன்னை மிஞ்ச யாரும் இல்லையே..

தடைகளை தகர்த்தென்னை தலைவன் ஆக்கினாய்
தலையணை மடி கொண்டு சேயாய் மாற்றினாய்  
அன்பென்னும் ஒற்றை சொல்லை உலகம் ஆக்கினாய்
அந்த உலகமே நீயென உணரவைத்தாயே..
என் தாயே..

கருவாய் நானும் இருந்திடும்போது கனவுகள் நூறு கண்டாயே
முழு உருவாய் உன்முன் பிறந்திடும்போது கனிவுடன் என்னை அணைத்தாயே
உன் வியர்வை துளியில் என்னை நனைத்து உயர்வை உனக்கு தருவேனே 

வரைமுறை நானும் மீறிடும்போது நெறிமுறை சொல்லி தந்தாயே 
விதியுடன் நானும் மோதும்போது மதியால் வெல்ல வைத்தாயே
அழகாய் நீயும் இல்லையெனினும் அம்மா
என்றாலே அழகு தானே 

தோழியே முதல் தோழியே 
உந்தன் அன்புக்கில்லை வேலியே..
காதலே முதல் காதலே
உன்னை மிஞ்ச யாரும் இல்லையே..

Comments

Popular posts from this blog

Support The Champs

MA(DAI)YAN CALENDER

நானா நீயா