நட்பின் காதல்

நீ வானம்..
நான் மேகம்..
நம் அன்பே இங்கு மழையானது..
நம் உறவே நம் உலகானது..

எதிர்ப்புகள் நிறைந்த உலகமிது..
எதிர்பார்ப்புகள் இல்லா நெஞ்சம் ஏது..
இருந்தும் நம் புரிதல் நம்மை இணைத்தது..
பல மோதல் தாண்டியும் நம் நட்பு தழைக்குது..

நீ வானம்..
நான் மேகம்..
அன்ப..
மழையானது..
உறவு..
உலகானது..

அன்பை அடக்கி ஆள்வது உன்னிடமே.
என்னை அடக்கி ஆள்வது உன் மனமே..
அன்பை விதைத்து சென்றது நீதானே..
அதில் நட்பை அறுவடை செய்வது நான்தானே..

நீ பூமி..
நான் வேர்..
நம் நட்பே இங்கு நிலையானது..
நம் உணர்வே என்றும் அழகானது..

உன் கண்களில் நான் என்னை கண்டதில்லை..
பெண்களில் உன்னை போல் யாரையும் கண்டதில்லை..
உன் பேச்சு என்னை என்றும் கவர்ந்ததில்லை....
ஆண்களில் உன்னை போல எவரும் என்னை கவர்ந்ததில்லை...

நீ பூமி..
நான் வேர்..
நட்பே..நிலையானது..
உணர்வே..
அழகானது..

Comments

Popular posts from this blog

Support The Champs

MA(DAI)YAN CALENDER

நானா நீயா