தொ(ல்)லைப்பேசி
கோகுல்:டேய் நீ கொடுத்த அட்ரஸ் சரிதானா?
மோகன்:டேய்..அஹ.அஹ,,என்ன டவுட்டா..அட்ரஸ் குடுத்தது நான்டா.
கோகுல்:அதான் கேட்கிறேன் சரியானு.
மோகன்:ஒய்,என்ன நக்கலா?
கோகுல்:இல்லடா தேவையில்லாம வேற எங்காச்சும் போய்ட கூடாதுல.அதான் கேட்டேன்.சரி,அங்க போயட்டபிறகு கால் பண்றேன்.பை.
மோகன்:மச்சான்,அவகிட்ட லவ் சொன்ன பிறகு ட்ரீட் டா.
கோகுல்:லவ் சொன்னதுக்கேவா?
மோகன்:அட,நமக்கெல்லாம் இதுவே ஜாஸ்திடா.சரி,முடிச்சிட்டு கால் பண்ணு.ஆல் தி பெஸ்ட்.பை.
(செல்லும் வழியில் ஒரு போன் கால்)
கோகுல்:ஹலோ..
ப்ரியா:ஹலோ..என்ன சார்.நேத்து இவனிங் வரேன்னு சொல்லிட்டு வரவே இல்லை.
கோகுல்:ஹே இல்லப்பா.நேத்து நம்ம மோகன் கீதா அட்ரஸ் வாங்குறதுக்காக போனான்.அதான் அவனை பார்க்க போனேனா.அப்படியே மறந்துட்டேன்.சாரி.
ப்ரியா:ஹ்ம்ம்..ஹ்ம்ம்..இருக்கட்டும்.இருக்கட்டும்.இப்பவே எங்களை மறந்துட்ட.லவ் ஓகே ஆச்சுனா கேக்கவா வேணும்.
கோகுல்:ஹே என்னப்பா இப்படி சொல்லிட்ட.நான் போய் உன்ன மறப்பேனா?
ப்ரியா:அதான் நேத்து மறந்துட்டியே.
கோகுல்:அட,நேத்து என்ன சொன்னேன்?
ப்ரியா:இவனிங் வரேன்னு சொன்ன.
கோகுல்:அஹ,இவனிங் வரேன்னு சொன்னேன்.ஆனா என்னைக்கு இவனிங்னு சொன்னேன்னா.
ப்ரியா:போடா பிராட்.நீலாம் தேறவே மாட்ட.
கோகுல்:ஹஹஹா...கண்டிப்பா.பின்ன,உன் பிரெண்ட் ஆச்சே...ஹஹாஹாஹ்...கூல்.கோச்சுக்காதப்பா.
ப்ரியா:ஹிஹி..சரி,சரி...ஆல் தி பெஸ்ட் டா.அவகிட்ட சொன்ன பிறகு என்னாச்சுன்னு சொல்லு மறக்காம.பை.
கோகுல்:கண்டிப்பா.தேங்க்ஸ்.பை.
(மீண்டும் ஒரு போன் கால்)
கோகுல்:ஹலோ,சொல்லும்மா..
அம்மா:ஹலோ...ஹ்ம்ம்..சொல்லிட்டேண்டா.
கோகுல்:என்னத்த?
அம்மா:அதான் "ஹலோ,சொல்லும்மா"னு சொன்னியே.அதான் ஹலோ சொல்லிட்டேன்டான்னு சொன்னேன்.
கோகுல்:ஐயோ,இப்படி மொக்கை போடத்தான் போன் போட்டியா?
அம்மா:ஹிஹி..கோச்சுக்காதடா.இப்போ எங்க போய்கிட்டு இருக்க?
கோகுல்:போகும்போதே எங்க போறேன்னு கேட்குறியே,இது நல்லாருக்கா.
அம்மா:நீ கூடத்தான்.எங்கே போறேன்னு சொல்லாம போன.அது மட்டும் நல்லாருக்கா.
கோகுல்:அடடா,வம்பு பண்ணனும்னே பேசுறியா.இப்போ என்ன வேணும் உனக்கு.அத சொல்லு முதல.
அம்மா:ஒன்னும் இல்லடா,நம்ம கவுசி மாமி வீட்டுல போய் சீட்டு பணம் கட்டிட்டு வரணும்டா.
கோகுல்:இன்னைக்கி தான் கட்டனுமா.கடைசி நாள் எப்போன்னு சொல்லு.அப்போ போய் கட்டிக்கலாம்.
அம்மா:அதான் இப்போ சொல்றேன்.ஏன்னா,இன்னைக்கு தான் கடைசி நாளு.
கோகுல்:அம்மா ஆஆ ஆ ஆ ஆ ஆ ...உன்னை...ஒன்னும் பண்ணுறதுக்கில்லை.ஜீவா வீட்டுக்குத்தான் போறேன்.ஒரு அரை மணி நேரத்துல...(இன்னொரு கால் வரவே)...சரி,சரி..ஒரு கால் வருது.நீ வை.சாயங்காலமா போய் கட்டிடுறேன்.
அம்மா:சரி டா...நான் வச்சிடுறேன்.
(இன்னொரு கால் எடுக்கப்படுகிறது)
கோகுல்:ஹலோ..
ஜீவா:ஹலோ..டேய்..கோகுல்,என்னடா சொல்லிட்டியா?
கோகுல்:அதுக்காக தான் போய்கிட்டே இருக்கேன்.
ஜீவா:என்னது,பயத்துல ஒன்னுக்கா?
கோகுல்:வுட்டேன்னா...அவ வீட்டுக்கு டா.
ஜீவா:வீட்டுக்கா.டேய்,அங்க அவ அண்ணன்,அப்பன்னு குடும்பமே இருக்குமே.எப்படிடா?
கோகுல்:அவங்க எல்லாம் இன்னைக்கு ஏதோ அவங்கப்பா பிரெண்ட் வீட்டு விசேஷத்துக்கு போறாங்களாம்.என் ஆளு MBA எக்ஸாமுக்கு படிப்பதால போகலை.
ஜீவா:அது புள்ளை.நீயும் இருக்கியே.
கோகுல்:எலேய்,அவ படிச்சா என்ன.நான் படிச்சா என்ன.எல்லாமே ஒண்ணுதாண்ட.எப்படியும் அவ எனக்கு பொண்டாட்டியா வரப்போறா.சோ,எப்படி பார்த்தாலும் சோழர் பரம்பரையில் ஒரு MBA .
ஜீவா:ஓவர் மிதப்புல தான் திரியுற..
கோகுல்:வுட்ரா ..வுட்ரா....நாங்கெல்லாம்...டேய்.டேய்..கீதா டா...
ஜீவா:அதுக்குள்ள வீட்டுக்கு போயிட்டியா?
கோகுல்:இல்லடா.மெயின் ரோட்டுல தான் இருக்கேன்.டிபார்ட்மெண்டல் ஸ்டோர்ல ஏதோ வாங்க வந்துருக்கா.இதான் சரியான நேரம்.நீ போன்ன வை,நான் போய் என் லவ்வ சொல்றேன்.
ஜீவா:சூப்பர் மச்சி.கலக்கு.நைட் ட்ரீட் டா.ஆல் தி பெஸ்ட்.பை.
கோகுல்:இன்னைக்கு எப்படியாச்சும் நம்ம லவ்வ சொல்லிடனும்.நம்ம லவ்வ சொல்லுற விதத்துல அவ அப்படி......ஆ...அம்மா.....ஆ.ஆ.ஆ.ஆ.ஆ.ஆ.ஆ.ஆ.ஆ............
வாழ்க்கை பயணத்தில் காதலில் மாட்டிகொள்வது மட்டுமல்ல,சாலை பயணத்தில் காதில் மாட்டிகொள்வதும் விபத்தை உண்டாக்கும்.ஆகையால்,தயவு செய்து,வண்டி ஓட்டும் போது பேசுவதை தவிர்க்கவும் அல்லது வண்டியை நிறுத்திவிட்டு பேசவும்.தலைக்கவசமும் முக்கியம் - இப்படிக்கு பாதிக்கப்பட்ட உள்ளங்களுக்காக பாதிக்க படாத ஒரு உள்ளத்தின் வேண்டுகோள்.நன்றி வணக்கம்.

Comments
Post a Comment