(க்)ராக் ஜாக்
நடு கடலிலே கப்பல இறங்கி தள்..
ராக்:ஹலோ..இட்ஸ் ராக்குமுத்து ஸ்பீக்கிங்.நீங்க யாரு?
ஜாக்:ஹஹஹஹஹஹா....நான் யாருன்னு தெரிதா?
ராக்:இப்படி ஒரு கேவலமான சிரிப்பா இதுக்கு முன்னாடி கேட்டதில்லை.ஒரு வேலை..ஹ்ம்ம்.. டேய்,பத்தாவது படிக்கும்போது பக்கத்துக்கு வீட்டு பவுனோட கவுன திருடி செருப்படி வாங்குன செந்தில் தானே.
ஜாக்:நான் பத்தாவது படிச்சதில்லை.
ராக்:இல்லையா..ஹ்ம்ம்.அஹ,அப்போ அஞ்சாவது படிக்கும்போது ஒரு ஐஸுக்கு சண்டைபோட்டு ரெண்டு அய்சும் தொலைச்ச அய்யாசாமி தானே.
ஜாக்:ஹஹஹா...நான் அஞ்சாவதும் படிச்சதில்லை.
ராக்:அதுவும் இல்லையா..அப்போ ரெண்டாவதுல ரெட்டைஜடை ரேணுகாவ கண்ணடிச்சு கன்னத்துல அடி வாங்குன கண்ணன் தானே.
ஜாக்:ஹிஹிஹி...நான் ரெண்டாவதும் படிக்கலை.
ராக்:அப்போ என்னதாண்ட படிச்சிருக்க?
ஜாக்:நான் படிச்சதே இல்லை.ஏன்னா பள்ளிக்கூடம் போனதே இல்லை.
ராக்:இத முதலயே சொல்லவேண்டிதான
ஜாக்:இத முதலயே கேட்கவேண்டிதானே
ராக்:யாருகிட்ட பேசுறேன்னு தெரியாம பேசிகிட்டு இருக்க
ஜாக்:நீகூட தான் யாருகிட்ட பேசுறேன்னு தெரியாம பேசிக்கிட்டு இருக்க.ஹஹஹஹா...நாந்தாண்ட உன்னால கைது செய்யப்பட்ட ஜாக்சன்.
ராக்:டேய்,நாயே நீயா..ச்சா..நான்கூட ஏதோ பெரிய ஆளுன்னு நினச்சேன்.நீ எங்காச்சும் தர்மடி வாங்கி தர்மாஸ்பத்திரில கிடப்பேன்னு நினச்சேன்.
ஜாக்:அடிபட்டு ஆஸ்பத்திரி போக நான் ஒன்னும் சாதாரண மனுஷன் இல்லடா.மிருகம்,வெறி பிடிச்ச மிருகம்.
ராக்:நோ ப்ராப்ளம்.அங்க வெட்னரி வார்டு கூட இருக்கு.சோ,நீ தாராளமா சேர்ந்துக்கலாம்.
ஜாக்:கொழுப்புடா உனக்கு
ராக்:யாஹ் யு ரைட்.ஒரே ஆயில் புட்ஸ்.நெறைய கொழுப்பு சேர்ந்திடுச்சு.அதை அடக்க வழி இருக்கா?
ஜாக்:அடக்குறேண்டா.அதுக்கு தான்டா போன் பண்ணேன்.உன் வீட்டுல உன் மாமன் பொண்ணு இருக்காளா பாரு?
ராக்:என் மாமன் பொண்ணா.ஹ்ம்ம்.ப்ரியா.ப்ரியா...அம்மா ப்ரியா எங்க...?
அம்மா:கோவிலுக்கு போறேன்னு போனா?
ராக்:மை காட்.ஹே ஜாக்,அவளை என்ன பண்ண சொல்லு?
ஜாக்:சொல்லுறேன்டா.நேரா கிளம்பி பெரம்பூர் ஓல்ட் கிளாஸ் பாக்டரிக்கு வா..அதுவும் அரை மணி நேரத்துக்குள்ள.
ராக:நேரா வரது கஷ்டம்.பிரிட்ஜ் வேலை நடக்கிறதால ஒன் வே ஆக்கிட்டாங்க.சோ,சுத்திட்டு தான் வரணும்.எக்ஸ்ட்ரா அரை மணி நேரம் கொடு.
ஜாக்:சரி,பெர்மிஷன் கிராண்டட்.
ராக்:தேங்க்ஸ் யுவர் கிட்னேப்பர்.ஏட்டு என் பைக் சாவி எடுத்துகிட்டு வா.கிளம்புவோம்.
(பாக்டரி நோக்கி போய்கொண்டு இருக்கும்போது வழியில் செக்ச்போஸ்ட்)
ராக்:ஏட்டு,வண்டிய நிப்பாட்டு.இந்த மூணு வழி இருக்கே..
ஏட்டு:முதல் ரூட்ல போனா செக் போஸ்ட்.அடுத்த ரூட்ல போன பீச்.அடுத்த ரூட்ல போன பெட்ரோல் பேங்க்.செக் போஸ்ட் வழிய போனா சீக்கிரமா போகலாம்.பீச் வழியா கொஞ்சம் டைம் ஆகும்.பெட்ரோல் பேங்க் வழிய போனா ரொம்ப டைம் ஆகும்.
ராக்:வெரி குட்.அப்போ பெட்ரோல் பேங்க் வழியா போங்க..
ஏட்டு:சார்.ஏன் சார்...?
ராக்:வண்டிக்கு லைசென்ஸ் இல்லை.ஒ.சில வாங்கினது.அதான்.
ஏட்டு:சார்...
ராக்:இந்த விஷயம் நமக்குள்ளயே இருக்கட்டும்.
ஏட்டு:எஸ் சார்.
ராக்:அதோட வண்டில பெட்ரோலும் இல்லை.அதவிட முக்கியம்.பெட்ரோலுக்கு காசும் இல்லை.
ஏட்டு:சார்..
ராக்:இந்த விஷயமும் நமக்குள்ளயே இருக்கட்டும்.
ஏட்டு:எஸ் சார்.
(பாக்டரியை வந்து அடைந்த பிறகு)
ராக்:ஜாக்..ஜாக்..எங்க இருக்க வெளியா வா?
ஜாக்:பாத்ரூம்ல இருக்கேன்.ஒரு பைவ் மினிட்ஸ் வெயிட் பண்ணு.
(ஐந்து நிமிடங்கள் கழித்து)
ஜாக்:வா ராக்.எப்படி இருக்க?
ராக்:வெயில்ல வந்ததுல களைப்பா இருக்கேன்.ரெண்டு கூல் ட்ரிங்க்ஸ் சொல்லு வித் ஸ்ட்ரா.
ஜாக்:பொறுப்பில்லாம பேசுறியே ராக்..
ராக்:அவ்வளவு தூரம் டிராவல் பண்ணி வரேன்.என்னை டைமுக்கு ரிசீவ் பண்ணலை.உன்னமாதிரி பங்க்சுவாலிட்டி இல்லாத பன்னாடை பொறுப்பு பத்தி பேசுறது தப்பு.
ஜாக்:பஞ்சோட குவாலிட்டி பத்தி என்கிட்டே கேட்டா எப்படி?
ராக்:படிக்காத பட்டிகாடுல.மறந்துட்டேன்.
ஜாக்:அஹ,இவுரு மட்டும் படிச்சா மேதை.பத்தாவது பெயில் ஆகி,பிட் அடிச்சு பாஸ் ஆகி,சிபாரிசுல போலீஸ் ஆனவந்தானே நீயு.
ஏட்டு:சார்..
ராக்:இந்த விஷயமும் நமக்குள்ளயே இருக்கட்டும்.
ஏட்டு:எஸ் சார்.
ஜாக்:வீண்பேச்சு ஏன்.முடிஞ்ச என்னை முடிச்சிட்டு அவளை தூக்கிட்டு போடா.
ராக்:உன்னை முடிக்கிறது ஈஸி.பட் தூக்குறது கஷ்டம்.ஐ ட்ரை மை பெஸ்ட்.
ஜாக்:ஹஹஹஹஹா...என்ன முடிக்கிறது அத்தன சுலபா என்ன.நான் சீரும் சிங்கம் டா..
ராக்:நான் பாயும் புலிடா..
ஜாக்:நான் உறுமும் சிருத்தைடா..
ராக்:நான் மதங்கொண்ட யானைடா..
ஏட்டு:ஆகமொத்தம் ரெண்டு பெரும் மனுஷ ஜென்மமே இல்லடா.
ராக்:தோ பாரு ஜாக்.உன் நெஞ்சுல இருக்கிற எல்லோ ரைஸா எடுக்குறதுக்குள்ள ப்ரியாவ ஒப்படைச்சிடு.
ஜாக்:என் தலை முடிய கூட உன்னால டச் பண்ண முடியாது.
ராக்:அந்த பேன் புடிச்ச தலை முடியை நான் இல்லை.வேற எவனும் டச் பண்ணமாட்டான்.
ஏட்டு:ஐயோ,பஞ்ச் பேசி பஞ்சர் ஆக்கினது போதும்.அவங்களை பாருங்க.
ராக்:சரி,ப்ரியா எங்க.அவளை என்ன பண்ண சொல்லு..
ஜாக்:அதோ அங்க பாரு உன் ப்ரியாவ..
ராக்:ப்ரியா....அஹ..ஐயோ,கண்ணம்மா...
ஜாக்:கண்ணம்மா வா..
ராக்:ஆமா,என் வீட்டு வேலைக்காரி.இவளை ஏன்டா தூக்கிட்டு வந்தீங்க.
ஜாக்:பார்க்க அழகா இருந்தா.அதான் பசங்க தூக்கிடாணுக.
ராக்:யாஹ் யு ரைட்.அதான் சைடுல ட்ரை பண்ணேன்.பட் அய் கான்ட்.
ஏட்டு:சார்..
ராக்:இந்த விஷயமும் நமக்குள்ளயே இருக்கட்டும்.ஹெனிஹவ்வு,நீ உஷார் பண்ணிட்டா...ஆல் தி பெஸ்ட் டு யு போத்.
ஏட்டு:என்ன சார்,சண்டை போடாம வந்துடீங்க.
ராக்:எனக்கு சண்டை போடுறது பிடிக்காது.என்ன,எனக்கு சண்டை போட தெரியாது.
ஏட்டு:சார்...
ராக்:இந்த விஷயமும்..
ஏட்டு:நமக்குள்ளயே இருக்கும் சார்.ஆமா..அவன் போன் பண்ணி சொன்னதும் கிளம்பிட்டீங்களே.வழில எங்காச்சும் ப்ரியாவுக்கு போன் பண்ணி கேட்டுருந்தா இப்படி ஆகிருக்குமா?
ராக்:நீ சொல்றது செரிதான்.பட் என் போன்ல பேலன்ஸ் இல்லை.சோ...
ஏட்டு:இந்த விஷயமும் நமக்குள்ளயே இருக்கணும்.அதானே..அஹ,,சரி சரி..வா போலாம்.
ராக்:வா வா?
ஏட்டு:அட வாயா...
ராக்:யா வா?
ஏட்டு:உனக்கு என்னடா மரியாதை..இப்போ வரியா இல்லையாடா நீ?
ராக்:டா வா?
ஏட்டு:நான் கிளம்புறேன் போ.
ராக்:சார்...சார்..ஏட்டு சார்..வெயிட் ப்ளீஸ்.நானும் வரேன் இருங்க....
ஏட்டு:அது...அஹ,அப்புறம் நான் உன்னை டா போட்ட விஷயம் நமக்குள்ளயே இருக்கணும் என்ன.
ராக்:எஸ் சார்.
machi super duper hit story da.
ReplyDeleteexpecting your screenplay soon.....
ReplyDelete