கை கொடுக்கும் கை

சாம்:இன்னைக்கு வெயில் ஜாஸ்திடா

அசோக்:வேலையும் ஜாஸ்திடா..ஒரு ப்ராஜெக்ட முடிக்க எத்தன மாசம் முக்க வேண்டிருக்கு.

சாம்:எத்தன மாசம் முக்குன?

அசோக்:அது..அதுலாம் பார்த்தா வேலை பார்க்க முடியுமா?

சாம்:அப்புறம் ஏன் இந்த வீண் விரக்தி?

அசோக்:சும்மாத்தான்...சரி,சரி....யாருப்பா அங்க?

ஜீவா:சார்..என்ன வேணும் சார்?

அசோக்:உனக்கு என்ன வேணும்டா?

சாம்:எனக்கு ரெண்டு பரோட்டா..

அசோக்:எனக்கு ஒரு மீல்ஸ்.

ஜீவா:ரைட் சார்.

சாம்:நாளைக்கு சனிக்கிழமை.அரை நாள் தான்.ஆபிஸ் முடிஞ்ச கையோட எங்காச்சும் வெளிய போலாமா?

அசோக்:எங்கடா போலாம்?

சாம்:ஏதாச்சும் படத்துக்கு?

அசோக்:ஹ்ம்ம்...நம்ம ஆக்ஸன் ஸ்டார் அம்ஜத் கான் நடிச்ச " லூஸ் பாண்ட்௦௦ 007" பார்க்கலாமா?

சாம்:அதுக்கு புல் டே ஆப்பிஸ்லையே இருக்கலாம்.

அசோக்:அப்போ ரோமென்ஸ் ஸ்டார் ரோஹித் நடிச்ச "நைனாவும் மைனாவும்" பார்க்கலாமா?

சாம்:அவன் படத்துக்கு ஒ.சி ல டிக்கெட் கொடுத்தாலும் போகமாட்டேண்டா.

அசோக்:நடிப்பை புழியுறேன்னு பேருல நடிகைய போட்டு புழிவான்.

சாம்:அப்போ பீச்சுக்கு போலாமா?

அசோக்:நாம ரெண்டு பெரும்.போடா.அவன் அவன் ஜோடியோட வாரானுக.நாம மட்டும் தனிய போய் என்ன பண்ண.

சாம்:ஏன் நானும் தான்னே வரேன்.

அசோக்:உன்னை வச்சுக்கிட்டு என்னடா பண்ண?

சாம்:ஒய்...சரி,ஷாப்பிங் போலாமா?

அசோக்:என்ன வாங்குறதுக்கு?

சாம்:ஏதாச்சும் டிரஸ்,வாட்ச் இப்பிடி ஏதாச்சும்.

அசோக்:தேவையில்லாம போக கூடாதுடா?

ஜீவா:சார்..சாப்பாடு..

அசோக்:அஹ,வைப்பா...

ஜீவா:வேற ஏதாச்சும் வேணுமா சார்?

சாம்:நோ தேங்க்ஸ்.

அசோக்:அவன பார்த்தா சின்ன வயசு பையன் மாதிரி இல்லை.

சாம்:ஆமா,ஆமா..படிப்பு ஏறாத கேசுங்க இப்படித்தான் டேபிள் துடைக்கிறது,சர்வர் வேலைன்னு வருதுங்க.ஒழுங்கா படிச்சா உருப்படலாம்.

அசோக்:அதுவும் சரிதான்.இப்போ வர பசங்கள்ள பல பேருக்கு டி.வீ ல வர பாட்டு போட்டி,டான்ஸ் போட்டி இல்லைன்னா ஸ்போர்ட்ஸ்.அதுவும் குறிப்பா கிரிக்கெட்.இதுலா தான் ஆர்வம்.

சாம்:சரியாய் சொன்ன.முன்னைவிட இப்போ சென்னை ஸ்கூல்ஸ் ல ஸ்டேட் பர்ஸ்ட் வரதில்லை.நாமக்கல்,விழுப்புரம் னு தான் வராங்க.

அசோக்:இப்படி கண்டதுல ஆர்வத்தை காட்டி,படிப்புல கோட்டை விடுற கேசுங்க பெரிய இடம்மா இருந்தா எப்படியாச்சும் தேறிடும்.இப்படி எதுவும் இல்லம்மா இருந்தா இதான் நிலைமை.

சாம்:நம்ம ஜனா வோட சொந்தகார பையன் ஒருத்தன்.இப்படித்தான் கிரிக்கெட் கிரிக்கெட்னு சுத்தி உருப்படாம இப்போ ஏதோ ரைஸ் மில்ல வேலைபாக்குறான்.அவங்க வீட்டுல அவனை நினச்சு தினம் புலம்புறாங்க.

ஜீவா:சார்,பில் சார்.

அசோக்:தம்பி,இங்க எங்காச்சும் மொபைல் போன் சரிபன்ற கடை இருக்கா?

ஜீவா:இங்கிருந்து நாலாவது சந்துல ஒரு கடை இருக்கு சார்.ஆனா அவங்க செய்ற வேலைய விட கேட்குற விலை செமையா இருக்கும்.அதுக்கு அடுத்து ரெண்டு சந்து தள்ளி போனா அங்க ஒரு கடை இருக்கும் சார்.கொஞ்சம் பொறுமையா தான் செய்வாங்க.ஆனா வேலையும்,விலையும் சரியாய் இருக்கும் சார்.ஆமா,என்ன ப்ராப்ளம் சார்?

அசோக்:போன் பேட்டரி சரியாய் வொர்க் ஆகலை.சவுண்ட் வேற கம்மியா கேக்குது.அதான்.

ஜீவா:சார்,அப்போ இதுக்கு எதிர் சந்துல ஒரு கடை இருக்கு சார்.அங்க போனா அந்தந்த போன் கம்பெனிக்கு எத பேட்டரி கிடைக்கும் சார்.அங்கையே சர்விசும் உண்டு சார்.

சாம்:ஹ்ம்ம்..சந்து பொந்துல இருக்கிற கடை எல்லாத்தையும் தெரிஞ்சு வச்சுருக்க.

ஜீவா:வேலை நேரம் போக மீதி நேரம் இங்கியே தான் எங்காச்சும் சுத்துவேன் சார்.அப்பப்போ சில கடைகள்ள வேலையும் பார்ப்பேன்.அப்படிதான் பழக்கம் சார்.

சாம்:அப்போ கை வசம் ஏகப்பட்ட தொழில் இருக்கும்போல.

ஜீவா:ஏதோ கொஞ்சம் தெரியும் சார்.தொடர்ந்து பண்ணா முழுசா கத்துப்பேன் சார்.

அசோக்:ஏன்பா உன் பேர் என்ன?

ஜீவா:ஜீவா சார்.

அசோக்:என்ன வயசு?

ஜீவா:14 சார்.

சாம்:ஏன்டா ஏதாச்சும் படிக்கிறியா?

ஜீவா:இல்லை சார்.ஆறாவதொட நின்னுட்டேன்.

சாம்:நல்லாத்தான் பேசுற.அப்புறம் மேல படிக்குறதுக்கு என்னவாம்.குடும்ப கஷ்டமா?

ஜீவா:ஆமாம் சார்.

சாம்:ஸ்டேட் பர்ஸ்ட் வர பசங்க எல்லாம் என்ன பணக்காரங்களா...எல்லாரும் உன்ன மாதிரிதானே.சும்மா சால்ஜாப்பு சொல்லாத.

ஜீவா:அப்படிலாம் இல்லை சார்.

சாம்:பின்ன எப்படியாம்?

அசோக்:சரி சரி விட்ரா.இந்தா வச்சுக்கோ.

ஜீவா:வேண்டாம் சார்.

சாம்:என்ன கோபமா..சும்மா வாங்கிகோடா.

ஜீவா:இல்லை சார்.நீங்க சொன்ன பசங்களுக்கு காசு குடுத்து சப்போர்ட் பண்ண ஆளு இருக்காங்க சார்.

சாம்:ஏன் உனக்கு யாரும் இல்லையா?

ஜீவா:இருக்காங்க சார்.ஆனா எனக்கு,உங்களை மாதிரி காசு குடுக்குறாங்களே தவிர,சப்போர்ட் பண்ண கை குடுக்குறது இல்லை சார்.காசோட கையும் கொடுத்தா நானும்  நல்லா படிப்பேன் சார்.

முதலாளி:டேய் ஜீவா...

ஜீவா:அண்ணே...

முதலாளி:அங்க என்னடா பேச்சு.இங்க வந்து இவங்களை கவனி...

ஜீவா:தோ வந்துட்டேன்னே.செரிங்க சார்,நான் வரேன் சார்.

அவனது பேச்சில் படிக்க வேண்டும் என்ற எண்ணமும்,படிக்க இயலவில்லையே என்ற ஆதங்கமும்  தெரிந்தது இருவருக்கும்.இந்த ஜீவாவை போல் பல ஜீவாக்களை நாம் தினம்தோறும் நம் நடைமுறி வாழ்க்கையில் காண்கிறோம்.அவர்களை கண்டு பரிதாபப்பட்டு காசு கொடுக்காமல் அவர்களுக்கு நல்ல வாழ்க்கையை வாழ நம்மால் இயன்ற வழியில் உறுதுணையாய் இருந்தோமாயின்,பல தலைவர்களை உருவாக்கமுடியும்.பலதலைமுறைகளைசெழிப்பாக்கமுடியும்.

அதோடு,அதிமுக்கியமானதாய்,குழந்தை தொழிலாளர்கள் என்னும் கொடுமையை கூண்டோடு ஒழிக்க முடியும்.அவர்களுக்கு தேவை தொ(கை) அல்ல.நம்பிக்(கை)  என்னும் தோ(கை) முலம் வருடி கொடுத்தாலே போதும்.நிச்சயம் வா(கை) சூடுவார்.வணக்கம்.

Comments

  1. அருமை. இதை என்னால் செய்ய முடியாவிட்டாலும் என் நண்பர்களின் மூலமாக இது போன்ற தொழிலாளர்களுக்கு உதவியுள்ளேன். குறிப்பா பேப்பர் போடும் பசங்களுக்கு, பழைய பேப்பர் வாங்கும் படித்த இளஞ்சர்களுக்கு வாழ்க வளர்க. இன்னும் கொஞ்சம் பதிவை சுருக்கனும்.

    ReplyDelete
  2. surukkalaam nu thaan ninachen.aanaa,romba surukkunaa yetho nadagathanmaiyoda eluthuna maathiri amainchidum uraiyaadal.athaan.oru silarukku senchaalum antha uthaviyum uyarvaanathey...mikka magizhchi nanbaa...nanumavvaaru vaazhven palarai vazhavaithu

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

Support The Champs

MA(DAI)YAN CALENDER

நானா நீயா