பஞ்சாயத்து:மைக் டெஸ்டிங் ஒன்...டூ...த்ரீ...
முத்து:ஏலே...பஞ்சாயத்து இங்கிலீஷ் பேசுது டோய்...
பஞ்சாயத்து:யார அவன்.பல்ல பேத்து புடுவேன்.நம்ம ஊரு கோவில் திருவிழாவுக்கு வந்துருக்கிற பதினெட்டு பட்டி ஊரு சனங்களுக்கும் வணக்கம்.எல்லா அங்காளி பங்காளி எல்லாம் பகை,வஞ்சத்தை எல்லாம் தீ ல போட்டு கொளுத்தி புட்டு ஒன்னுகொன்னா வாழனும்.சந்தோசமா கொண்டாடுங்க.
சுப்பு:என்ன கவுண்டரே,கருத்து எல்லாம் சொல்லுறீக....கவலை படாதீங்கப்பு....இந்த வருஷமும் நீங்கதான் நம்ம ஊரு பஞ்சாயத்து போர்டு சேர்மன்..ஹஹஹஹஹா
பூசாரி:ஆத்தா..நம்ம ஊரு செழிக்க,எல்லாருக்கும் நலம் கிடைக்க....வயக்காடு எல்லாம் பச்சை பசேல்ன்னு கிடக்க மாதம் மும்மாரி மழை பெய்யணும் ஆத்தா...
சோமு:முள்ளமாரிகளா இருக்கிற ஊருல எப்படி மும்மாரி மழை பெய்யும்.அதுகள திறத்தி புட்டாலே மழை கொட்டோ கொட்டுன்னு கொட்டும் சாமி.
கண்ணாத்தா:எடுபட்ட பயலுகளா,ஆத்தா வ சீண்டுனா சீக்கு வந்து சின்னபின்னமா ஆவீங்கலே
சோமு:அப்போ ஆத்தா வ கொஞ்சுனா கொக்கு வந்து கொழுக்கு மொழுக்குன்னு ஆவோமோ....போ கிழவி..சும்மா அளக்காத.
வாத்தி:ஹஹஹஹா...ஏன் ஆத்தா...தப்பு பண்ணுறவன் தலைமுறை எல்லாம் தல வாழ இலை போட்டு சாப்பிடுறாங்க.தப்பு பண்ணாதவன் தலைமுறை உயிர் வாழ உலை போட்டு சாப்பிடுறாங்க.இதை கண்டும் காணாத கடவுள சீண்டுனா சீக்கு வந்திடுமா...போய் பொழப்ப பாரு ஆத்தா...
முத்து:என்னலே சக்தி,போன வாரம் வேலை விஷயமா அந்த புல்லட் பாண்டிய போய் பார்த்தியே..என்ன சொன்னான்...
சக்தி:நீ வேற..அவன் புல்லட் பாண்டி இல்லை.புளுகு மூட்டை பாண்டி.என்னமோ எட்டு மணி செய்திகள்ல வானிலை அறிக்கை படிக்கிறவன் சொல்வானே "தோ வருது மழை..அதோ வருது மழை" ன்னு அந்த மாதிரி தோ வேலை,அதோ வேலைன்னு இழுதடிக்கான் பிக்காளி பையா...அவன நினச்சாலே கடுப்படிக்குது...
வேலு:விடு மாமா,திருவிழா ல போய் அந்த தருதலைய நினைச்சுகிட்டு.அங்க பாரு நம்ம பவளக்கொடி பாவாடை தாவணி ல பளபளப்பா வரா.
என்ன பவளம்,ஒரே பளபளப்பா இருக்க.மச்சான்ன கண்டுக்க மாற்றியே.கொஞ்சம் இங்க வார்றது.
பவளம்:வேணும் னா நீ வாயேன்.என் சித்தப்பன் சின்னசாமி அங்கதான் கிடக்காரு.ஒரு எட்டு போய் பார்த்திட்டு வருவோம்.
வேலு:அட நீ போய் பாருமா,இதுக்கெல்லாம் என்னை கூப்டுகிட்டு.பார்த்து போடி என் ராசாத்தி.
காலி:என்னடா,பல்பா..இதெல்லாம் தேவையா.போன திருவிழா ல அமுதா கிட்ட வம்பிழுத்து அவங்காத்தா உன்னை விளக்கு மாறால விளாசுனத மறந்துடியாக்கும்.
சக்தி:ஹஹஹஹஹஹா....வாடா காலி.எங்க ஒரு வாரமா ஆள காணோம்.
காலி:அண்ணன் ஊருக்கு போயிட்டு வந்தேண்டா.
முத்து:அங்க போய் என்னடா பண்ண?
காலி:ஒன்னும் பண்ணல.சும்மாதான் இருந்தேன்.
சோமு:அதுக்கு எங்ககூடையே இருக்கலாம் ல.நாங்களும் சும்மாதான் இருக்கோம் டா பல வருஷமா.
முத்து:டேய் கம்முனு இறுடா.என் ஆளு செண்பகம் வரா.இப்போ பாரு பீட்டர.
ஹே சக்தி,வென் திருவிழா கெட் எண்டிங் யா?
சக்தி:அப்புடினா..?
காலி:திருவிழா எப்போ முடியுதுன்னு கேக்குது மூதேவி...
முத்து:கண்ட்ரி ப்ருட்ஸ்.திஸ் வொய் ஐ நாட்..ஐ நாட்...ஐ..நாட்...ஆஹ...பலகிங் வித் யு
சக்தி:டேய்,அதான் வரலைல.அவளும் வரலைல...இல்லாத ஊருக்கு இன்லாந்து லட்டரா....அவதான் உன்னை மதிக்கலைல...அப்புறம் என்னத்துக்கு அவல பார்க்க,பேச...விடுற..
முத்து:கான்பிடென்ட் இல்லா பாய்ஸ்.அவ எனக்குத்தாண்டா.
ஹே டார்லிங்,ஹவ் ஆர் யு டியர்?
கேன் வீ கோ டூ சினிமா?
செண்பகம்:ஒ..கூல்...கேன் ஐ கால் மை மாம் முனிமா?
முத்து:முனிமா வா.நோ,ஒன்லி நீ போதும்.யு மாம்,மை மாமா காலி டேக் கேர் மா.யு டோன்ட் வொர்ரி.
செண்பகம்:செருப்பு பிஞ்சிடும்...
முத்து:நோ ப்ரோப்ளம்.போற வழில தைச்சிட்டு போய்டலாம்.ஓகே டியர்.
செண்பகம்:சீ போடா...
முத்து:யு கம் டா..
செண்பகம்:அப்பா....
முத்து:அஹ,தங்கச்சி.என்னதுக்குமா அப்பாவ எல்லாம் கூப்டுகிட்டு.அவுரு பிஸியா இருப்பாருல.நீ போ மா...அண்ணன் இருக்கேன்.ஒரு பையன் உன்ன சீண்டாம பார்த்துக்கிறேன்.நீ போ மா செல்லம்.
சக்தி,காலி,வேலு,சோமு:சூப்பரப்பு.....ஹஹஹஹஹஹஹஹஹா...
பஞ்சாயத்து:என்னையா பஞ்சுமுட்டாய்காரா,வியாபாரம் எல்லாம் நல்ல போகுதா...
பஞ்சு:திருவிழா ல.அமோகம போகுது.நம்ம ராட்டினம் சண்முகம் கூட சந்தோசமா இருக்கான்.என்ன ஐஸ் வண்டி ஐயா சாமி தான் டல்.
பஞ்சாயத்து:ஏன்யா...ஐஸ் நல்ல இல்லையா என்ன?
பஞ்சு:ஐஸ் நல்லாருக்கு.ஆனா அவன் பைல்ஸ் தான் சரியா இல்லை.அதான் பாதிலயே போயிட்டாப்புல.
முத்து:பஞ்சாயத்து..என்ன எங்களை கவனிக்கவே மட்டேன்குறீங்க.
பஞ்சாயத்து:நீங்க என்ன மிட்டா மிராசா இல்லை ஜமீன் னா.தார தப்பட்டையோட வந்து கவனிக்க.ஊருக்குள்ள பொம்பள புள்ளைகிட்ட வம்பிளுதுகிட்டு திரியுற பயலுக தான.ஒழுங்கா இருக்க மாட்டீங்களாட எங்கள மாதிரி.
சக்தி:உங்கள மாதிரி இருந்தா எப்படி ஒழுங்கா இருக்கிறது.அது கஷ்டம் ல.
பஞ்சாயத்து:என்னடா சொல்றீங்க?
முத்து:ஆமாம் பெருசு...எங்க வயசுல நீ பண்ணாததைய நாங்க பண்ணிட்டோம்.ரவிக்கை போட்ட இலசுல இருந்து பொக்கை ஆனா கிழடுக வரை அம்புட்டையும் வளைச்சு வளைச்சு விளையாடிரிக்கியே.
காலி:சும்மா இருங்கட.பெருசு சுடாகுதுல.இந்த பெருசு.புது சரக்கு.சீமைல இருந்து என் அண்ணன் வாங்கிட்டு வந்தாப்புல.அடிச்சு என்ஜோய் பண்ணு.
பஞ்சாயத்து:உனக்காக இவங்களை விடுறேன்.
முத்து:தோ பாரா..அவனுக்காக இல்லை.சரக்குக்காக...ஹஹஹஹாஹ்..போ போ...
வேலு:அவுருக்கு ஏன்டா குடுத்தா.நாம என்ஜோய் பண்ணலாம் ல.
காலி:அட,அவன் போனாதான் டா.நாம சந்தோசமா இருக்க முடியும்.இல்லைனா குறை சொல்லிகிட்டே குடைவான்.அதான்.
முத்து:டேய் சக்தி,அங்க பாரு ஒரே லேடீஸ் கூட்டமா வருது.லெட்ஸ் ஸ்டார்ட் தி மியூசிக்.
அட பதினாறு வயசு வந்த மயிலே மயிலே,என்னை பாடாய் படுத்துதடி குயிலே குயிலே...
கனி:நான் அடிச்சா தாங்க மாட்ட.நாலு மாசம் தூங்க மாட்ட.மோதி பாரு வீடு போய் சேர மாட்ட.
வேலு:வாடி என் கப்பகிழங்கு..எங்கக்கா பெத்த குழாபுட்டே ஆடாதே வாயா திறந்தே
குயிலு:போடா போடா புண்ணாக்கு...போடாதடா தப்பு கணக்கு...இருக்கு உனக்கு இருக்கு..இப்போ என்னதப்புல கணக்கு..
காலி:நிக்கட்டுமா..போகட்டுமா...
பஞ்சாயத்து:அதான் நிக்காம போய்கிட்டு இருக்கேடா...அப்புறம் என்னடா நிக்கட்டுமா,போகட்டுமான்னு.
சக்தி:என்ன பஞ்சாயத்து...ஒரு மாதிரி வர?
பஞ்சாயத்து:என்னதடா குடுத்தீங்க...இப்படி வயித்த கலக்குது.
காலி:சீமை சரக்கு தானே குடுத்தேன்.எங்க அந்த பாட்டில் ல காட்டும்.
அஹ...ஐயையோ....பாட்டில் மாறி போச்சுடா.
பஞ்சாயத்து:என்னடா சொல்ற?
காலி:ஆமாம் பெருசு,சீமை சரக்குன்னு நினச்சு சீடை,முறுக்கு செஞ்ச எண்ணெய் இருந்த பாட்டில் ல எடுத்திட்டு வந்துட்டேன்.
பஞ்சாயத்து:அடப்பாவிகளா...நீங்கலாம் நல்லா இருக்க மட்டீங்கடா.நாசமா தான் போவீங்க.
முத்து:நாங்க நாசமா போறது இருக்கட்டும்.முதல நீங்க ஓரமா போங்க
பஞ்சாயத்து:மவனே...உங்களை.....அஹ..ஐயோ....மறுபடியும் கலக்குதே...
சக்தி,காலி,முத்து,வேலு,சோமு:கலக்க போவது யாரு..நீதான்...ஹஹஹஹஹஹஹஹஹா....
முத்து:பஞ்சாயத்து...இந்தாய இதை வாங்கிட்டு போ
பஞ்சாயத்து:என்னதுடா?
முத்து:அதான்யா சொம்பு....ஊர் பிரச்சனைன்னாலும் சரி...வயித்து பிரச்சனைன்னாலும் சரி....சொம்பு முக்கியம் பஞ்சாயத்து...சொம்பு..சொம்பு...ஹஹஹஹஹஹஹஹா..பை..பை..டேக் கேர் ..சி யு....மீண்டும் அடுத்த திருவிழா ல சந்திப்போமா....
Comments
Post a Comment