(வெட்)டீக்கடை
டீ கடையில் நடைபெறும் சூடான,(நகைச்)சுவையான உரையாடல்.
பழனி:யப்பா சாமிகண்ணு,சூடா ஒரு டீ.
அன்வர்:ஹே ரெண்டா சொல்லுப்பா....
பழனி:யாரா அது.வாயா அன்வரு நீயா.என்னிக்காச்சும் சொந்த காசுல டீ வாங்கி குடிக்கிறியா
ஐயர்:அப்படி வாங்கி குடிச்சிட்டா வருண பகவான் பொழியோ பொழின்னு போழிஞ்சிட மாட்டாரோன்னோ
பழனி:சரியாய் சொன்னேள் போங்கோ.அன்வர் என்னிக்காச்சும் நமக்கு வாங்கி கொடுபாருன்னு பாக்குறேன்.ஹ்ம்ம்..நடக்காது போலயே
ஐயர்:கண்டிப்பா நடக்காது.வேணும் னா சாமிகண்ணு காச்சி குடுத்த டீ யா வாங்கி கொடுப்பானேன் ஒலிய,இவன் காசு குடுத்து டீ வாங்கி தரபோதில்லை.ஹிஹிஹெஹெஹிஹி....
பழனி:ஹஹஹஹஹஹஹா சூப்பரா சொன்னீங்க ஐயரே..கை கொடுங்கோ..
ஐயர்:அட இதுக்கு எதுக்குப்பா கையெல்லாம் குடுதிண்டு.வேணும்னா ஒரு டீ சொல்லு.
அன்வர்:ஹஹஹஹஹஹஹஹஹா....யோவ் பழனி.இதுக்கு நான் பரவாலையா....ஹஹஹஹா...
தாமஸ்:என்னய்யா ஒரே சிரிப்பா இருக்கு.என்ன சங்கதி.
பழனி:ஒன்னும் இல்லை தாமஸ்,நம்ம ஐயர்,அன்வர் ல யாரு டீ வாங்கி தரபோறதுன்னு தான் பஞ்சாயத்து.
தாமஸ்:ரெண்டுமே இந்த ஜென்மத்துல நடக்காது.ஹஹஹஹஹஹஹா.....சரி,இன்னைக்கு நியூஸ் பார்த்தியா...ஒரு பொண்ணு ஏழு பேர ஏமாத்தி கல்யாணம் பண்ணிகிச்சாம்.
ஐயர்:என்னைய சொல்றேள்.ஒரு பொம்மனாட்டி எப்படி அதன பேர ஏமாத்திருக்க முடியும்.
அன்வர்:ஐயரே,இதுலாம் ஜுஜுபி இப்போ.எத்தன காலம் தான் ஆம்புளைங்கலே ஏமாத்துறது.ஒரு சேன்ஜ் வேணாமா....
ஐயர்:சேன்ஜ் பண்ணுறதுக்கு இது என்ன புடவையா.புருஷன்யா...அதுவும் ஒன்னா ரெண்டா...ஏழு பேரு.லோகம் கெட்டிடுத்து.கல்யாணம்கிறது ஆயிரம் காலத்து பயிர் ஆச்சே.
பழனி:அந்த ஆயிரம் காலத்து பயிர் எல்லாம் இப்போ அறுந்து போன டயர் ஆச்சே ஒய்.என்ன செய்ய.
தாமஸ்:ஆமா அந்த டெசோ மாநாட்டுல ஈழத்தமிழ் குறித்து ஓட்டு எண்ணிக்கை வச்சு ஆதரவு கேக்க சொல்லிரிகாங்கலே பா....இந்த ஒட்டு தேறுமா...
ஐயர்:அவங்களாண்ட துட்டு மட்டும் தான் தேறும்.ஒட்டு எதுவும் தேறாது.
பழனி:சரியா சொன்ன ஐயரே....இதுக்கு முன்னாடி எத்தன மாநாடு,எத்தன பேச்சுவார்த்தை.அதுல கிடைக்காத நியாயமா இதுல கிடைச்சிட போகுது.
அன்வர்:அங்க போய் சவுண்ட் வுட்டா பரவாலை.இங்க இருந்தே மேடைல சவுண்ட் வுட்டா நம்ம காத மட்டும் தான் கிழிக்க முடியும்.வேற ஒண்ணுத்தையும் கிழிக்க முடியாது.
பழனி:இந்த மதுரை கிரானைட் கல் மேட்டர் ல எத்தன பேரு மாட்டுறாணுக பார்தீங்களா.வீரம் விளைஞ்ச மண்ணுல வில்லங்கமும் விதைஞ்சிருக்கு.
ஐயர்:அவாளையெல்லாம் மதுரை மீனாட்சியம்மா பார்த்துப்பா ஒய்.
தாமஸ்:நல்லா பார்த்துப்பா போங்க.மதுரை ஆதினத்துல நடக்கிற கூத்த பார்த்துட்டே ஒன்னும் பண்ணாத மீனாட்சியம்மா,இதையா கவனிக்க போகுது.
ஐயர்:அப்படி என்னைய அங்க கூத்து நடக்கிறது.நித்யானந்தரின் நிர்வாக திறமையால் முன்னைவிட அமோகமா இருக்கு.
பழனி:என்னது நித்யானந்தர் திறமையா..எது...இந்த ராமராஜன் காலத்து டிரஸ் மாதிரி ஜிகு ஜிகுன்னு பல கலர்ல ஆளாளுக்கு மாட்டிகிட்டு திரியுறதும்,காபி மேக்கர்ல ஞானப்பால் வரதும்,சாமி ஏறாமலே சாமி ஆடுறேன்னு பேருல கண்ட பாட்டுக்கு டான்ஸ் ஆடுறது இதெல்லாம் அவர் திறமையா.
தாமஸ்:ஆமா ஐயர் என்ன நித்யானந்தர ஓவரா புகழுறாப்புல....என்ன ஐயரே,உன் வீட்டுலயும் வீடியோ வைக்கணும் போல.
ஐயர்:என்னது வீடியோ வா.ஐயையோ...நேக்கும் அதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.என்ன வுட்ட்ருங்கடா...நோக்கு புண்ணியமா போகும்.
அன்வர்:ஹஹஹஹஹஹஹா..பாரா ஐயர் பம்முரத.ஏன்யா,இந்த கோல்ட் ரேட் பார்த்தியா தொட்டுடிச்சி.
தாமஸ்:ஆமாப்பா,இந்த தங்கம்,காய்கறி,பெட்ரோல்,மளிகை சாமான் முக்கியமா கரண்ட் பில் பார்த்தாலே கரண்ட் இல்லாம ஷாக் அடிக்குது உடம்புல.
பழனி:இந்த அரசுக்கு என்ன தமிழ்நாட்டுல இருக்கிறவன் எல்லாம் டாடா பிர்லான்னு நினைப்பா..இஷ்டத்துக்கு எத்துராணுக.
தாமஸ்:அவனுங்கள குறை சொல்லி என்னப்பா யூஸ்.நீ சொன்னியே டாடா பிர்லா அவங்கள மாதிரி ஆளுக சம்பாதிக்கிற காசுல ஒழுங்கா வரி கட்டாம பாதி பணத்தை சுருட்ட போய் தான் இந்த அரசு நம்மளை சுரண்டுது.
அன்வர்:அதுலயும் அந்த அம்பானி பையன் ஒருத்தன்..முகேஷோ,அணிலோ...மாடிக்கட்டிடம் கட்டிருக்கான்.இத்தனைக்கும் அவன் குடும்பத்துல இருப்பது தான்.
ஐயர்:இப்படி அடுத்தவா வயித்துல அடிச்சு வாழுற வாழ்க்கை நன்னாவா இருக்கும்.அடுத்தவாளுக்கு குடுத்து அவா சந்தோஷத்துல வாழுறது தான் வாழ்க்கையாக்கும்.
தாமஸ்:சரியா சொன்ன ஐயரே...எங்க நாம குடிச்ச டீக்கு உங்க காசு குடுத்து எங்களை சந்தோஷ படுத்துங்க பார்ப்போம்.
ஐயர்:அஹ அது அது...அட போடாப்பா..நோக்கு எல்லாமே விளையாட்டு தான்.நேக்கு பூஜைக்கு நாழியாறது,அப்போ நான் கிளம்பட்டா...
அன்வர்:ஹிஹிஹிஹிஹிஹி.....யோவ் ஐயரே,நீ சரியான ஆளுயா...அந்தா போறான் பாரு பேப்பர் போடுற பையன்.அவன்கூட ஓசில டீ குடிக்க வாடான்னா வரமாற்றான்.காசு குடுத்து தான் குடிக்கிறான்.நீ என்னையான்னா,ஒத்த டீக்கு ஓராயிரம் ஓவா கேட்ட மாதிரி ஓடுற.
ஐயர்:அந்த பொடியனும் நானும் ஒண்ணா...என்ன மாதிரி பெரியவா படுற கஷ்டதையா பட்டுடன்.நாங்களும் அவா வயசுல இருந்து இப்போ வரைக்கும் உழைக்கிறோம் ஒய்.என்னைக்குமே பெரியவா தான் டாப்.சின்னவலாம் வந்திட முடியாது ஒய் புரிஞ்சிக்கோ நன்னா.
பழனி:ஏன் முடியாது.அதான் வந்துடாங்கலே நம்ம ஜூனியர்ஸ்.ஆஸ்திரேலியா ல நடக்கிற ஜூனியர் உலக கோப்பை இறுதிக்கு போய்டாங்கலாம் நாலாவது வாட்டி.
ஐயர்:அதுவா,அதான் பார்த்தேனே.என்னத்த ஆடுறா.ஒரு இல்ல,இல்ல.தட்டு தடுமாறி ஆடுற.இதெல்லாம் தேறதுக்கா.
தாமஸ்:அடிக்க இது என்ன பணத்தை வச்சு மட்டுமே ஆடுற லா.நாட்டுக்காக ஆடுற ஆட்டம் யா.சினியர்சே தினறுற ஆஸ்திரேலியா பிட்சுல பல நாடுகளை அடிச்சு வந்துரிக்காங்கள.
அன்வர்:அது மட்டுமா,ஒவ்வொரு போட்டிலயும் எத்தன போராட்டம்.பெருசா ஜெயிக்குறான்களோ இல்லையோ போராடி ஜெயிக்கிறாங்கள..அத பாருயா...நல்ல போராட்டம் தான் உண்மையான வெற்றிய கொடுக்கும்.
ஐயர்:அஹ கிழிக்கும்.அடிக்கிற ஆட்டம் சந்தோசமா இருக்கும்.அது இல்லாத ஆட்டம் என்னத்தையா கொடுக்கும்.
பழனி:ஓவரா பேசுற ஐயரே.சேரி,அது கொடுக்குதோ இல்லையோ...நீ நாம குடிச்சதுக்கு காச குடும்.அட் லீஸ்ட்...நீ குடிச்சதுக்காசும் காசு குடு ஐயரே.
தாமஸ்:ஐயர் பம்புறாரு டோய்
பழனி:யோவ் ஐயரே..நில்லு யா..ஹஹஹ்ஹஹாஹ்ஹாஆ.....
சாமிகண்ணு:அவுரு போனா போகட்டும்.நீங்க யாராச்சும் காச குடுங்க.
அன்வர்:ஆமா..பழனி..காச குடுத்திட்டு வா,நான் அங்க தெரு முனைல இருக்கேன்.சீக்கிரம் வந்திடு.
பழனி:என்னது நான்னா...அட...இவன...யப்பா தாமஸ்,அவசரத்துல காசு எடுக்காம வந்துட்டேன்.நீ என்ன பண்ற,இப்போ நீ குடுத்திடு,நான் சாயங்காலமா பார்க்கும்போது தந்திடுறேன்.சரியாய்...யோவ் சாமி,இவரு கிட்ட வாங்கிக்கோ.சாயங்காலம் பார்ப்போம் தாமசு...வர்ட்டா..
தாமஸ்:என்னது அவசரத்துல எடுக்காம வந்துட்டிய.என்ன ஆபீசுக்கா கிளம்புற.டீக்கடைக்கு தான்யா கிளம்புற.இதுல என்ன அவசரம்.காசு இல்லாததுக்கு எத்தன அலப்பறை பார்த்தியா சாமி...
சாமிக்கண்ணு:இவங்க எல்லாரும் இப்படிதான் சார்.நீங்க கொடுங்க.
தாமஸ்:அது வந்து...மணி பர்ஸ் வீட்டுல வச்சுட்டேன்.போய் எடுத்திட்டு வந்து தறேன்.வர்ட்டா...
சாமிக்கண்ணு:யோவ் யோவ்....நில்லுயா...பெரிய தலைவருக மாதிரி பேசுறது.ஆனா ஒத்த பைசா தரதில்லை.அதுசரி,பெரிய தலைவர்களும் இப்படித்தானே.நாளைக்கு வாங்க,சுடு தண்ணிய தூக்கி மூஞ்சில ஊத்துறேன்.
அன்வர்:அதை எதுக்கு மூஞ்சில ஊத்திகிட்டு,கைல குடுத்தா குடிச்சிட்டு போறோம்.உங்க கடை டீய விட சுடுதண்ணி சூப்பருயா...
சாமிகண்ணு:யோவ் பாய்,இன்னும் இங்கதான் சுத்துரியா..காச குடுத்திட்டு போயா...யோவ் பாய்...
அன்வர்:பை
சாமிகண்ணு:யோவ் பாய்...பாய்...
அன்வர்:பை..பை....
Comments
Post a Comment