ஊனத்தின் அழகு
வாழ்வின் ஒவ்வொரு நிமிடங்களையும் முழுதாய் அனுபவிக்கும் குழந்தைகளும்,வாழ்வை முழுதாய் அனுபவித்த குழந்தைகளான முதியோரும் மாலை பொழுதின் மயக்கத்திலே உற்சாகத்தோடு இருந்தனர் மலர் பூங்காவில்.
அதே பூங்காவின் ஒரு ஓரத்தில் வானத்தையே உடையாய் உடுத்தியது போன்ற நீல நிற உடையில்,மேகக்கூட்டமாய் வெள்ளை நிற துப்பட்டாவில் ஒரு வெண்புறா போன்ற தேவதையாய் சந்தியாவும்,அவள் எதிரில் சுமாரான தோற்றமும்,ஆடையுமாய் மெல்லிய புன்னகையுடன் ராஜுவும் உரையாடிகொண்டிருந்த போது அவர்களை நோக்கி பளிச்சென ஆடையுடுதிக்கொண்டு வந்தான் பிரவீன்.
பிரவீனும்,ராஜுவும் ஒருவருக்கு ஒருவர் பழக்கமில்லாதவர்கள்.அனால் அவர்களுக்கு இடையே உள்ள ஒரே சம்பந்தம் சந்தியா.இருவரும் அவளை காதலித்தனர்.ஆனால் அவர்களில் சந்தியா காதலித்தது ராஜுவை.அதற்கான காரணத்தை கண்டறியவே பிரவீன் வந்துள்ளான்.
பிரவீன்:ஹாய் சந்தியா....
சந்தியா:ஹாய் பிரவீன்...
பிரவீன்:உன்கூட கொஞ்சம் பேசணும்.
சந்தியா:ஹ்ம்ம் பேசலாம் வா.
பிரவீன்:உனக்கு தெரியும் நான் உன்னை காதலிப்பதை.
சந்தியா:நான் ராஜூன்னு ஒருத்தரை காதலிப்பதும் உனக்கு தெரியும்.
பிரவீன்:யாஹ் யாஹ் ஐ நோவ் அபௌட் இட்.மே ஐ நோவ் மேட் யு டு லவ் ஹிம்?
சந்தியா:முதல ராஜு யாருன்னு தெரியுமா?
பிரவீன்:யாஹ்,ஏதோ ஆட்டோமொபைல் ஷாப் ல வேலை பாக்கிறவன்னு கேள்விபட்டேன்.ஆளுகூட சுமாரா தான் இருப்பானாமே...ஹே...என்ன முறைக்காத...பசங்க சொன்னானுக...
சந்தியா:பைன்.
பிரவீன்:என்ன பைன்.நான் உன்னை எத்தன நாலா லவ் பண்றேன்.திடீர் னு ஒருத்தனை லவ் பண்றத சொல்ற.
சந்தியா:திடீர்ன்னு இல்லை.அவனும் ஒரு வருஷமா என்னை லவ் பண்றான்.நானும் பண்றேன்.
பிரவீன்:அப்படி என்ன என்கிட்டே இல்லாதது அவன்கிட்ட இருக்கு னு அவனை லவ் பண்ற?
சந்தியா:அதுவா..ஹ்ம்ம்...ஒரு சில மாசத்துக்கு முன்னாடி உன் ஆபீஸ் மேனேஜருக்கு அடிபட்டுச்சுல.அவர நீ சமிபத்துல வேலைய வுட்டு தூக்கிடியாமே.ஏன்?
பிரவீன்:நான் என்ன கேட்கிறேன்.நீ எதை பேசுற?
சந்தியா:கேட்ட கேள்விக்கு பதில்?
பிரவீன்:ஆமா.அவன் அடிபட்ட பிறகு கால எலும்பு முறிவு.சோ,பழைய மாதிரி வேலை பண்ண முடில.கஷ்டப்பட வேண்டாம் னு சொன்னேன்.கேக்காம வேலைய செய்றேன்னு பேருல நெறைய சொதப்பல்.புரிஞ்சிகல தூக்கிட்டேன்.
சந்தியா:அவரு மூலமா தானே உனக்கு நெறைய ப்ரோஜெக்ட்ஸ் கிடைச்சுது.
பிரவீன்:ஆமா,பட் அதுக்குன்னு அவரையும் கஷ்டபடுதிகிட்டு...எங்களையும் கஷ்டபடுதிகிட்டு..எதுக்கு..அதான்..ஆமா அதுக்கு என்ன?
சந்தியா:சோ,நல்ல வேலை பார்த்த ஒருத்தருக்கு அடிபட்டு பழைய மாதிரி பண்ண முடிலைன்னு சொன்னவுடன் கொஞ்சம் கூட யோசிக்காம அவர தூக்கிடனும் னு நினைக்கிறியே.ஒரு வேலை எனக்கு அந்த குறை இருந்தா என்ன பண்ணுவ?
பிரவீன்:என்ன கேள்வி இது?
சந்தியா:பதில்..பதில்
பிரவீன்:உன்னை டாக்டர் கிட்ட காட்டி ட்ரீட்மென்ட் கொடுத்து சரி பண்ணிடுவேன்.
சந்தியா:அந்த ட்ரீட்மென்ட் ல கூட நான் சரியாகலைன்னா?
பிரவீன்:உஸ்ஸ்ஸ்...வேற டாக்டர்ஸ்.வேற ட்ரீட்மென்ட்.
சந்தியா:சரி.கடைசி வரைக்கும் எனக்கு சரி ஆகலைன்னா?
பிரவீன்:ஆகலைனா...என்ன பண்ண சொல்ற?
சந்தியா:என் கால் சரி ஆகலைன்னா கூட என்னை கடைசி வரைக்கும் இதே அன்போடு வச்சி பார்த்துக்க மாட்டியா?
பிரவீன்:அது...அது..ஆஹ பிளாஸ்டிக் கால் பிக்ஸ் பண்ணிக்கலாம்.எப்படி?
சந்தியா:அதை பண்ணலாம்.இதை பண்ணலாம்..அதை வச்சுக்கலாம் னு சொல்றியே தவிர உனக்கு எந்த குறை இருந்தாலும் நான் உன்னை கைவிட மாட்டேன்னு சொல்லமாற்றியே.
அத்தன வருஷம் உனக்காக உழைச்ச மேனேஜர அடிபட்ட காலோட இருபதால அசால்ட்ட தூக்கி எறிஞ்சிட்டியே.அப்படி இருக்கையில நானும் அப்படி ஆனா என்னை தூக்கி எறிய மாட்டேன்னு என்ன நிச்சயம்.
பிரவீன்:ஹே அப்படியில்லை அது..
சந்தியா:நான் உன்னை குத்தம் சொல்லலை.எல்லாருக்கும் தங்களுக்கு வர போற வாழ்க்கை துணை பார்க்க அழகாவும்,அம்சமாவும் எந்த குறையும் இல்லாம இருக்கணும் என்ற எண்ணம் இருக்கும்.நான் கேட்டது அப்படி ஒருத்தர் வாழ்க்கை துணையா அமைஞ்சி அவங்களுக்கு திடீர் னு இப்படி ஏதேனும் ஒரு குறை வந்தா, கடைசி வரைக்கும் அவங்க மேல வச்சிருந்த அன்பு குறையாம அவங்களை பார்த்துபியானு தான்.
உன்கிட்ட சில குறைகள் இருக்கு.அதை மாத்திக்கோ.உனக்கு கண்டிப்பா ஒரு நல்ல பொண்ணு கிடைப்பா.
பிரவீன்:என்கிட்டே குறையா..சரி,நீ சொன்ன அதே சூழ்நிலைல அவன் என்ன பண்ணிருப்பான்?
சந்தியா:ஹஹஹஹா.....
பிரவீன்:சிரிக்காத...பதில் பதில்..
சந்தியா:நீயே இப்போ தெரிஞ்சிப்பே
(சந்தியா அவள் இருக்கையை விட்டு எழுந்துரிக்க முயலும்போது தடுமாற அவளை தாங்கி கொள்கிறான் ராஜு)
சந்தியா:என்ன பார்க்கிற.எனக்கு உண்மையாவே கால் ஊனம் தான்.என்னோட இந்த ஊனத்தை யாரும் பரிதாபமா பார்த்திட கூடாதுன்னு தான் நான் இதை யாருகிட்டயும் காட்டிகிட்டதில்லை.முடிஞ்சவரை உக்காந்த மாதிரியே சமாளிப்பேன்.
இது ராஜுவுக்கு நல்லா தெரியும்.தெரிஞ்சாத காட்டிக்கவும் இல்லை.இதபத்தி எதுவும் சொல்லவும் இல்லை கேட்கவும் இல்லை.நானே ஒரு நாள் கேட்டபோது " உன்னை பார்க்கும் போது உன் என் கண்ணுக்கு உன் ஊனத்தை விட எப்படியும் வாழ்ந்து காட்டனும் என்ற உன் மனசு தான் தெரிஞ்சது.அது உன்னவிட ரொம்ப அழகா இருக்கு.அதான் உன்னை காதலிக்கிறேன்"னு சொன்னாரு.
இப்படி இருந்தாதான் காதலிக்க முடியுமுன்னு எந்த எதிர்பார்ப்பும் இல்லாம,எப்படி இருந்தாலும் காதலிச்சு வாழலாம் னு நம்பிக்கைய குடுத்துச்சு அவரு சொன்ன வார்த்தை.நல்ல உறவுக்கு அடையாளம் நம்பிக்கை தான்.அவருக்கு என் மேல இருந்த நம்பிக்கை தான் எனக்கு அவரு மேல நம்பிக்கை குடுத்துச்சு.அதான் அவரை காதலிச்சேன்.நீ என்கிட்டே பார்த்த அழகு வேற.அவர் என்கிட்டே பார்த்த அழகு வேற.நான் சொல்ற அழகு மனச பத்தி.இப்போ புரிஞ்சிருக்கும் எது உண்மையான காதலுன்னு.சரி பிரவீன்,நாங்க வரோம்.
(வரோம் என்று கூறிவிட்டு சில அடிகள் சென்ற பிறகு ப்ரவீன்னை திரும்பி பார்த்து)
சந்தியா:நான் உன்கிட்ட குறை னு சொன்னது உன்கிட்ட இல்லை.மத்தவங்கள குறைய மட்டும் பார்க்கிற உன் மனசுல.அத மாத்திக்கோ பிரவீன்,எல்லாமே மாறும் நல்லபடியா.பை.
அவர்கள் நடந்து செல்வதையே பார்க்கும் ப்ரவீனுக்கு அந்த கணம் மௌனமாகிறது.அவன் மனம் ஊனம் ஆகிறது.சிறிது நேரத்தில்,கனத்த இதயத்தோடும் தெளிந்த மனதோடும் அவனும் நகர்கிறான்,சூரியன் மறையும் நேரத்தில்,புது விடியலை நோக்கி.

super...
ReplyDelete