அரசு அது பழசு
நாட்டு நிலவரங்களை ஆளுங்கட்சி மற்றும் எதிர் கட்சியை சேர்ந்த "முக்க்கிய" அமைச்சர்களோடு கலந்து விவாதிக்கும் நிகழ்ச்சி.பங்கு பெறுவோர் க.க.போ கழகத்தின் செயலாளர் திரு.இசக்கிமுத்து மற்றும் கு.க.போ கழகத்தின் செயலாளர் திரு.கசக்கிமுத்து அவர்களுடன் நமது சிரிப்பு நிருபர் குமரிமுத்து.
குமரி:இஹஹஹ்ஹஹஹஹஹஹஹா..வணக்கம் நேயர்களே...இன்று நம்முடன் கலாய்க்க வந்துருப்பது க.க.போ செயலாளர் இசக்கியும்,கு.க.போ செயலாளர் கசக்கியும்.இருவருக்கும் வணக்கம்.
இசக்கி,கசக்கி:வணக்கம்.
குமரி:முதலில் க.க.போ கட்சியின் தேர்தல் வாக்குறுதிகளை செயல்படுத்தவில்லை என்ற குற்றசாட்டை பற்றி பார்ப்போம்.
இசக்கி:அது என்னன்னா..
கசக்கி:அத நான் சொல்றேன்.
இசக்கி:பார்தீங்களா,அவர் வாய்ப்பு வருவதுக்கு முன்னரே அடுத்தவர் வாய்ப்பை பறிக்கும் இந்த செயலே அவருடைய குறுகிய மனப்பான்மையை குத்திகாட்டுகிறது என்பதை நான் உங்களுக்கு சுட்டிக்காட்டுகிறேன்.அதான் நாங்க சொல்றோம்ல.
குமரி:அவரே சொல்லட்டும் திரு.கசக்கி அவர்களே.
இசக்கி:நாங்கள் சொன்னதை சொன்னபடி நிறைவேற்றினோமே.கல்வியை கட்டாயமாக்கினோம்.
கசக்கி:அஹ நல்லா ஆக்குனீங்க.கல்விய கட்டாயாமாக்குங்கன்னா இவங்க சொல்ற கல்விய தான் கட்டாயாம் ஆக்குனாங்க.புக் லேட்,ஸ்கூல் ஆரம்பிச்சது லேட்,பசங்களுக்கு பாடம் ஆரம்பிச்சது லேட்,பசங்க பாடத்தை புரிஞ்சிகிட்டது அதவிட லேட்.ஸ்பீடா ஆட்சிக்கு வந்தது இப்படி எல்லாத்தையும் லேட் ஆக்கதான்னா.
இசக்கி:ஆனா தேர்ச்சி சதவிகிதம் முன்பை விட அதிகம் என்பதை சுட்டி காட்டுகிறேன்.
கசக்கி:தேர்ச்சி அதிகமாகி என்ன சார் பயன்.கல்வியின் தரம் குறையுதே.
இசக்கி:ஏன் தரத்தில் என்ன குறை.பலமடங்கு மேம்பட்டுள்ளது.
கசக்கி:என்னத்த மேம்பட்டுச்சு.அடிதான் பட்டுச்சு.ஆசிரியர் பசங்களை அடிக்கிறாங்க.பசங்க ஆசிரியரை கொலையே பண்றாங்க.போதா குறைக்கு சினிமால வொய் திஸ் கொலைவெறி,அடிடா அவள...புடிடா இவளன்னு பாட்டு வேற பாடி உசுபேத்துறாங்க.
குமரிமுத்து:இஹஹஹஹ்ஹாஹ்ஹஹஹஹஹஹா...நல்ல கருத்துள்ள பாட்டு.இல்லையா சார்.
இசக்கி:அட யாருயா இவன்.அந்த சினிமாவுக்கு மானியம்,வரி விலக்குன்னு பல சலுகை குடுத்ததே உங்க ஆட்சில தானே.அப்போ குடுத்திட்டு இப்போ குத்துதே,குடையுதேனா எப்புடி.பிரகாசமா இருந்த கலையுலகம் இருண்டு போச்சு.
கசக்கி:வேணும்னா லைட் போட்டுவுட்டு வாங்களேன்.நல்ல பிரகாசமா எரியும்.நீங்க ஆட்சிக்கு வந்து தமிழ்நாடே இருட்டுல கிடக்கே அதுக்கு என்ன சொல்றீங்க.வீடு மட்டும் இல்லாம,ஸ்கூல்,கடைன்னு கல்வி,வணிகமுன்னு எல்லாமே இருண்டு கிடக்கு.மின்சாரம் போனதால் ரொம்ப சுலபமா திருடுறாங்க.
இசக்கி:எங்க ஆட்சில மின்சாரம் முலமா தான் திருடுனாங்க.உங்காட்சில மின்சாரத்தையே திருடுனாங்கலே.உங்க ஐயா நின்னா பாராட்டு,உக்காந்தா பாராட்டு,ஓடுனா பாராட்டு,படுத்தா பாராட்டு,ஏன் கொட்டாவி வுட்டா கூட பாராட்டு.உங்காட்சில கால்ரா வ விட உங்க ஜால்ரா தான்யா ஜாஸ்தி இருந்துச்சி.எல்லா பாராட்டு விழாவுக்கு எத்தன செலவு.எத்தன மின்சார திருட்டு.
கசக்கி:இது அவதூறு பரப்பும் செயல்.எங்கையா அவர்களின் கை கரை படியா கை.குடுத்து குடுத்து சிவந்த கை.
இசக்கி:எது அல்வா தானே.
கசக்கி:எங்களை சொல்லாதீங்க.நீங்கதான் இலவச அரிசி தரேன்னு ஒரு பக்கம் சொல்லிட்டு இன்னொரு பக்கம் எல்லா பொருளோட விலைவாசியும் ஏத்தி மக்களுக்கு அல்வாவோடு ஜிலேபியும் கொடுதீங்கலே.
குமரிமுத்து:இஹஹஹ்ஹஹஹஹஹஆஹா...ஜிலேபி மேட்டர் சூப்பர் சார்.
இசக்கி:அதற்க்கு காரணம் நீங்கதான்.ஸ்பெக்ட்ரம் ஊழல்,நில மோசடி,பாராட்டு விழான்னு குடும்பத்துல ஒவ்வொருத்தரா சேர்ந்து கஜானாவ சுரண்டி தமிழ்நாட்டையே உங்க வீடாக்கி குடும்ப ஆட்சி நடத்துனீங்க.
கசக்கி:அங்க மட்டும் என்னவாம்.உங்க கட்சிளையே ஒருத்தர் முலம் அவங்க குடும்ப சேர்ந்த எல்லாரும் ஒவ்வொன்னா அட்மிஷன் வாங்கி அலப்பறை பண்ணலை.அதுவும் குடும்ப ஆட்சி தானேயா.
குமரிமுத்து:சபாஷ் சரியான போட்டி.இஹஹஹஹஹஹஹஹஹஹஹா
இசக்கி:உங்க சட்டைல ஓட்டைய வச்சுக்கிட்டு அடுத்தவர் சட்டைய நோண்டாதீங்க.
கசக்கி:நாங்கெல்லாம் சட்டைல மட்டும்தான் ஓட்டை போடுவோம்.உங்கள மாதிரி பஸ்ல ஓட்டை போட்டு பயணிகள்,குழந்தைக உசுருக்கு வேட்டு வைக்க மாட்டோம்.
இசக்கி:அது அந்த வண்டிய சரியாய் செக் பண்ணாத ஓட்டுனர் மற்றும் பள்ளி நிர்வாகத்தின் தவறு.
கசக்கி:அந்த வண்டிய சரியாய் செக் பண்ணாதது ஆர்.டி.ஒ அதிகாரிகளின் தவறும் கூட.
இசக்கி:அவர்களுக்கும்,அந்த பள்ளி நிர்வாகத்துக்கும் தான் தண்டனை குடுத்தாச்சே.
கசக்கி:தண்டனை குடுத்தா போதுமா.இதே மாதிரி தவறு நடக்காம பார்த்துக்கணும்.
இசக்கி:கண்டிப்பாக நடக்காது.
கசக்கி:ஏன் நடக்காது.அதான் நேத்து சிவகாசி தீவிபத்தில் பல அப்பாவி உழைப்பாளர்கள் உயிரிழந்தனர்.அதுக்கு காரணமும் தரமற்ற பாதுகாப்பு முறைகேடுகள் தான்.இப்படி பல உயிர்களோடு விளையாடுவதே உங்கள் ஆட்சியில் வாடிக்கை ஆகிவிட்டது.
இசக்கி:எங்களை சொல்றீங்களே.பல ஆண்டுகளாக பல லட்சம் ஈழ தமிழர்களின் உயிரிழப்புக்கு என்ன சொல்றீங்க.அதுக்கு உங்க அரசாங்கம் என்ன பண்ணுச்சு?
கசக்கி:எங்களுக்கு முன்னாடி உங்க ஆட்சில நீங்க என்ன பண்ணீங்களோ அதேதான் நாங்களும் பண்ணோம்.
குமரிமுத்து:நீங்க என்ன பண்ணாங்க?
இசக்கி:ஒன்னும் பண்ணல.
கசக்கி:அதேதான் நாங்களும் பண்ணோம்.
குமரிமுத்து:கரெக்ட்.உங்க ரெண்டு கட்சி மட்டுமல்ல.வேறெந்த கட்சியும் தமிழ்நாட்டுக்கோ,தமிழ் ஈழதுக்கோ ஒன்னும் பண்ண போறதில்லை.அதனால் நாங்க ஒன்னு பண்ண போறோம்.
இசக்கி,கசக்கி:என்னது?
குமரிமுத்து:இந்த நிகழ்ச்சியே இத்துடன் முடிச்சிக்க போறோம்.அப்போ வரட்டுமா.வணக்கம்.இஹஹஹஹஹஹஹஹஹஹஹா
அட உங்களுக்கு நகைச்சுவை கூட வருமா. சரியான கிண்டல். நையாண்டி. வாழ்க வளர்க. "காலராவை விட ஜால்ரா" Lol
ReplyDelete