நட்பின் காதல்

ராசு:மச்சான் இன்னைக்கு ரெண்டுல ஒன்னு தெரிஞ்சாகனும்..உனக்கு அவ வேணுமா இல்லை நான் வேணுமான்னு.

ரதி:இதுல என்ன சந்தேகம்,அவருக்கு நான்தான் சரி.அவருக்காக நான் உசுரையும் கொடுப்பேன்.நீ என்ன கொடுப்ப?

ராசு:அவனுக்காக என் ட்ரவுசரையும் கொடுப்பேன்.

ரதி:ட்ரவுசரா..அதவச்சி என்ன பண்ண முடியும்?

ராசு:உன் உசுர வச்சி மட்டும் என்ன பண்ண முடியும்.ஊறுகா கூட போட முடியாது.ஆனா,என் ட்ரவுசர வச்சி அவன் மானத்தை காப்பாத்த முடியும்.உசுர விட மானம் பெருசு.சோ,உன் உசுர விட என் ட்ரவுசர் பெருசு.அப்படி பார்த்தா,உன்னவிட நான்தான் பெருசு.

ரவி:நீங்க ரெண்டு பேருமே எனக்கு பெருசு.உங்க ரெண்டு போரையும் என்னால பிரிச்சி பார்க்க பிடிக்கலை.

ராசு:எனக்கு உங்க ரெண்டு போரையும் சேர்த்து பார்க்க பிடிக்கலை.

ரதி:எனக்கும் ரெண்டு பேரையும் சேர்த்து பார்க்க பிடிக்கலை.

ராசு:பார்த்தியா ரவி,அவளே ஒத்துகிட்டா.குட்.

ரதி:ஹே,நான் சொன்னது உங்க ரெண்டு பேரையும் சேர்த்து பார்க்க பிடிக்கலேன்னு.

ரவி:ஐயோ,உங்க ரெண்டு பேருக்குள்ள அப்படி என்னதான் பிரச்சனை.

ராசு:நீதான் பிரச்சனை.அவமேல நீ வச்சு இருக்கிற காதல்தான் பிரச்சனை.உன் பக்கத்துல நாங்க இருந்தாலும்,நினப்புல அவதான் இருக்கா.முன்னமாதிரி எங்களுக்காக டைம் ஸ்பென்ட் பண்ண மாற்ற.ஏன்,காசு கூட ஸ்பென்ட் பண்ண மாற்ற.இதுக்கெல்லாம் காரணம்,இந்த உருப்படாத காதல்.

ரதி:ரொம்ப பேசாத.காதல் பத்தி உனக்கு என்ன தெரியும்.நட்புங்கிறது மனுஷங்க கிட்ட மட்டும் தான் இருக்கும்.ஆனா காதல் என்பது காக்கா.குருவி கிட்ட கூட இருக்கும்.

ராசு:ஏன் காடை கவுதாரி கிட்ட இருக்காதா.இந்த பூவே உனக்காக படத்த வச்சி பூ சுத்தாத.நட்புங்கிறது பறவை,மிருகம் கிட்டயும் இருக்கும்.டேய் ரவி,ஒரு விஷயத்தை நோட் பண்ணியா?

ராவ்:என்னதுடா?

ராசு:உதாரணத்துக்கு கூட காக்கா,குருவின்னு சொன்னாலே.இதுல இருந்து என்ன தெரிது?

ரவி:என்ன தெரிது?

ராசு:அஹ,உங்காயா சுருக்கு பை தெரிது.எவன்டா இவன்,அந்த பறவைக மாதிரி இவளும் ஒரு நாள் பறந்திடுவான்னு தெரிது.

ரதி:என்ன சொல்லாத.எப்போ பாரு அவன் கூடவே சுத்திகிட்டு,அவன் காசுலையே மங்களம் பாடிகிட்டு இருக்கிற நீ,என்ன சொல்றியா.ரவிகூட கொஞ்ச நேரம் மனசு விட்டு பேச முடிதா.அன்னைக்கு காதலர் தினம் அப்போ படத்துக்கு போலாம்னு இருந்தா இந்த ரவி உன் வீட்டுக்கு வந்துட்டான்.

ராசு:அன்னைக்கு என் வீட்டுக்கு எங்க பிரெண்ட்ஸ் வந்துட்டாங்க.

ரதி:சரி,தமிழ் புத்தாண்டு அன்னைக்கு படத்துக்கு போலாம்னு இருந்தோம்.ஆனா அன்னைக்கும் ரவி  வரலை.

ரவி:அப்போ என் வீட்டுக்கு பிரெண்ட்ஸ் வந்துட்டாங்க.

ரதி:அப்போ போன மே மாசம் கிஷ்கிந்தா போலாம்னு இருந்தோம்ல.அப்போ ஏன் வரலை.

ராசு:அப்போ நாங்க பிரெண்ட்ஸ் வீட்டுக்கு போய்ட்டோம்.

ரதி:இப்படியே ஊருல இருக்கிற பிரெண்ட்ஸ் வீட்டுக்கு எல்லாம் போய்கிட்டு இருந்தா..அப்புறம் என் நிலைமை?

ரவி:அவ்வளவு தானே.கூல்.நாளைக்கே உன் வீட்டுக்கும் வரோம்.ஓகே வா.

ரதி:அட,அத யாரு சொன்னா.கூட சுத்துற பிரெண்ட்ஸ் மட்டுமே கவனிச்சா போதுமா.கூடவே வழ போற என்னை கவனிக்க வேண்டாமா?

ராசு:அதுக்குன்னு உனக்கும் சரக்கு,சைடிஷ் வாங்கி தர முடியுமா?

ரவி:டேய்..பாவி...

ரதி:என்னது சரக்கா..ஏய் ரவி,இவன் என்ன சொல்றான்.நீ குடிப்பியா?

ரவி:அது..அது..வந்து...

ரதி:ச்சி..இப்படி ஒரு பழக்கம் இருப்பதை சொல்லாம மறைச்சுட்டல்ல.ஏன்?

ராசு:எங்க சொன்னா நீயும் ஒரு கிட்டிங் கேட்பியோனு பயந்துட்டான் போல.என்னடா மச்சான்?

ரவி:வாய மூடுடா.

ரதி:ஒ,நீதான் இவனுக்கு பழக்க படுத்திவிட்டியா?

ராசு:அய்யய்யோ...இவுரு பச்சமண்ணு.தொட்டில போட்டு சக்கரை தண்ணி ஊத்துற மாதிரி சரக்கு ஊத்தி குடுத்தேன் பாரு.எனக்கு அந்த பழக்கம் இல்லை.இவன்தான் குடிப்பான்.அதுக்கு காரணம் நீதான்.

ரதி:நான்னா?

ராசு:ஆமா,எப்போ பாரு என்னை கவனிக்கலை,மதிக்கலைன்னு போன் போட்டு புலம்பிட்டு இருந்தா,புள்ள கடுப்பாகுதுல பாவம்.அதான் மனக்குறை போக்க மது பக்கம் போய்ட்டான்.

ரவி:டேய் ராசு,சும்மா இருடா.

ரதி:அவன் சொல்றதுல என்ன தப்பு ரவி.சரியா தான் சொல்றான்.உன்கூட இருக்கணும்னு தான் நினைசென்னே தவிர சத்தியமா உன்னை கஷ்டப்படுத்தனும்னு நினைக்கலை.ஆனா,இப்போ நானே உன்னை தப்பு பண்ண வச்சிட்டேன்.சாரி ரவி.

ரவி:ரதி ப்ளீஸ்.அப்படி பேசாத.எங்கம்மாக்கு பிறகு என்னை முழுசா நேசிச்சதும்,நான் முழுசா நேசிக்கிற பொண்ணும் நீதான்.உன்னால நான் குடிக்கல.அது சும்மாபா பிரெண்ட்ஸ் சொன்னாங்களேன்னு  பழகினது.உன்னவிட இந்த குடி பெரிசில்ல ரதி.என்னை நம்பு.

ராசு:ஹிஹி..இப்படிதாண்டா எல்லாரும் சொல்வானுக அவன் அவன் ஆளு கிட்ட.ஆனா அப்புறம் நைசா குடிப்பானுக.நீயும் அப்படிதான் மச்சான்.

ரவி:டேய்,நான் அப்படி இல்லை.அவளை உண்மையாய் நேசிக்கிறேன்.

ரதி:பரவாலை ரவி.உனக்கு எது சந்தோசமோ அதை நான் தடுக்க மாட்டேன்.உனக்கு சந்தோஷத்த குடுக்கலைன்னாலும் சங்கடத்த குடுக்க மாட்டேன் பா.

ரவி:அப்படிலாம் இல்லப்பா...இப்போ சொல்றேன்,நம்ம காதல் மேல ஆணையா நான் இனி குடிக்கமாட்டேன்.

ராசு:நம்பிட்டோம்.நம்பிட்டோம்.

ரவி:டேய்..உன்னை..ரதி ப்ளீஸ்...நான் என்ன செஞ்சா என்னை நம்புவ?

ராசு:அவ மேல,உன் அங்கம்மா மேல சத்தியம் பண்ணி சொல்லணும் ராசா.

ரவி:....ஹ்ம்ம்..சரிடா,இனி நான் குடிக்க மாட்டேன்.இது ரதி மேல,எங்கம்மா மேல,ஏன் உன் மேலையும் சத்தியம்.

ராசு:என்னது என்மேலையா.யார கேட்டுடா என்னை சேர்த்த லிஸ்ட்ல.சரி,நல்லதுக்கு தானே....ஒ.ஒ.ஒ.ஒ.ஒத்துக்கிறேன்.(என்ன நடக்க போகுதோ மகமாயி)

ரதி:ஹஹஹா...ரொம்ப சந்தோசம் ரவி.இப்போதான் மனசு நிறைஞ்சுருக்கு.

ரவி:ஆனா எனக்கு நிறையலையே 

ரதி,ராசு:ஏன்?

ரவி:உங்க சண்டைக்கு முடிவு கிடைக்கலையே இன்னும்.அதான்.

ராசு:சண்டைன்னு ஒன்னு போட்டாதானே முடிவு கிடைக்கும்.நாங்கதான் போடலையே.அவ என் சிஸ்டர் டா.இது எல்லாம் ஒரு செட் அப்பு தான்..உன் குடிபழக்கத்தை நிறுத்துறதுக்கு.

ரதி:ஆமா ரவி,ராசு அண்ணன் இதபத்தி சொல்லி ரொம்ப வருத்த பட்டான்.அதான் நாங்க பிளான் போட்டு நடிச்சோம்.ஆனா,உண்மையிலையே நீ குடிச்சா அது எங்களையும்,உங்கம்மாவையும் காயபடுத்தும்.அதை உனக்கு புரியவைக்க தான் இப்படி.தப்பா எடுக்காதடா.நாங்க உனக்கு நல்லதைத்தான் நினைப்போம்.அதை எப்பவும் மனசுல வச்சுக்கோ.

ராசு:ஆமாம் மச்சான்.சிஸ்டர் சொல்ற மாதிரி குவாட்டரும்,வாட்டருமா சுத்தாம காதலும்,கடமையுமா வாழ்க்கைய என்ஜாய் பண்ணுடா.அன்புக்கு அம்மா,பாயாசத்துக்கு ச்ச பாசத்துக்கு ரதி,மொக்கைக்கு நான்.ஏன்னா சொல்ற?

ரவி:என்னைவிட என்மேல அக்கறையா இருக்கிற நீங்க சொன்னதை விட வேற என்னத்த பெட்டரா நான் சொல்லிட போறேன்.ரொம்ப சந்தோசம்டா.உனக்கு எதாச்சும் பண்ணனும் டா.

ராசு:சிம்பிள்.ரதியோட பிரெண்ட் ரேணுவோட நம்பர் வாங்கி குடுடா.அது போதும்.

ரவி,ரதி:அடீங்க...

ராசு:எஸ்கேப்......


Comments

  1. Nallarukku...Character name identify panna konjam kastama irukku...Adha mattum BOLD pannidunga..Indha madhiri neraya ezhudha vaalthukkal...

    ReplyDelete
  2. அருமை தியாகராஜன். இந்த அவசர உலகத்தில கொஞ்சம் சுருக்கமா சொல்ல பாருங்க. இந்நேரம் ஒரு இருபது டிவிட்ட்ஸ் கவனத்துக்கு வராமல் ஓடிப்போயிருக்கும். இவ்வாறான நீளமான பதிவை படித்து உடனே கருத்து சொல்வது எல்லோராலும் இயலாத காரியம். மெதுவா படித்து மெதுவா கருத்து சொல்லலாம்னுதான் எல்லோரும் நினைப்பார்கள். சில சமயம் மறந்துகூட விடுவார்கள். ராசு ரவி ரதி பெயர்களை வித்தியாசமா சொல்லியிருக்கலாம். வாழ்க வளர்க (அப்புறம் இந்த "prove yourself that you are not a Robot" என்ற கண்டிஷனை உடனே அகற்றிவிடுங்கள். பலருக்கு கருத்து சொல்ல கஷ்டமா இருக்கும்)

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

Support The Champs

MA(DAI)YAN CALENDER

நானா நீயா