காதல் கீதை
வசந்த்:என்ன ரமேஷு,எப்பவும் பாலிஷ் பண்ண வொய்ட் ஹவுஸ்(white house) மாதிரி பளிச்சுன்னு இருப்ப.இப்போ ப்யூஸ் போன லைட் ஹவுஸ்(light house) மாதிரி டல்லா இருக்க.என்ன ஆச்சுடா?
ரமேஷ்:நீ எல்லாம் என்னை கலாயக்குற நிலைமை வந்துடுச்சே.என் ஆளு மாலினி இருக்காளே
வசந்த்:உன் ஆளா,என்னமோ அவளும் உன்னை லவ் பண்ற மாதிரி சொல்ற.
ரமேஷ்:சரி..நான் லவ் பண்ற மாலினி இருக்காளே..
வசந்த்:நீ மாலினிய மட்டுமா லவ் பண்ண?
ரமேஷ்:டேய்,என்ன நக்கலா.பேச விடுடா....நேத்து என்னை பார்த்து பேசணும்னு சொன்னா.நானும் சீக்கிரம் கிளம்பி அவ சொன்ன இடத்துக்கு டான்னு பத்து மணிக்கெல்லாம் போனேன்னா...
(பிளாஷ் பேக் (flash back)
ரமேஷ்:ஹாய் மாலினி..சாரி,ரொம்ப லேட் ஆகிடுச்சா.
மாலினி:இல்லை.ஜஸ்ட் ஒன் அவர் தான்..ஏன் லேட்?
ரமேஷ்:பைக் பஞ்சர் ஆகிடுச்சு.
(பேக் டு ரியல் டைம் (back to real time)
வசந்த்:ஹே நிறுத்து..நிறுத்து..
ரமேஷ்:எத வண்டியவா..அதான் ஆல்ரெடி பஞ்சர் ஆகி நின்னுடுச்சே.
வசந்த்:அட,அத சொல்லலை.உன்கிட்ட தான் வண்டியே இல்லையே.அப்புறம் எப்படி பஞ்சர்?
ரமேஷ்:அதான் சொல்ல வரோம்ல.அதுக்குள்ள என்ன அவசரம்..
(பிளாஷ் பேக் (flash back)
மாலினி:உன்கிட்ட பைக் இருக்கா?
ரமேஷ்:அஹ,என்கிட்டே இல்லை.நான் பஸ் ல தான் வந்தேன்.அப்போ ரோடு ல ஒருத்தன் பைக் பஞ்சர் ஆகிடுச்சு.அதனால கொஞ்சம் டிலே.
மாலினி:ஒ ரைட்.உன்னை எதுக்கு இங்க வரசொன்னேன்னு தெரியுமா?
ரமேஷ்:தெரியாதே.ஏன் உனக்கு மறந்து போச்சா எதுக்கு வர சொன்னேன்னு?
மாலினி:யு...நீ என்னை ரொம்ப நாளா லவ் பண்றேன்னு தெரியும்.அதபத்தி பேசத்தான் வரசொன்னேன்...ஆமா என்கிட்டே அப்படி என்ன இருக்குன்னு லவ் பண்ற..என் அழகை பார்த்தா..
ரமேஷ்:ச்சா ச்சா..அப்படிலாம் எதுவுமே இல்லை.
மாலினி:என்னது..அப்படி எதுவும் இல்லையா?
ரமேஷ்:அது,தபு,அது,வந்து..அஹ,அதாவது அழகை பார்த்து லவ் பண்ற மாதிரி இல்லைன்னு சொல்லவந்தேன்....உன்னோட திமிர் இல்லாத கோபம்,அலட்டல் இல்லாத சுபாவம்,எதையும் சட்டுன்னு பேசிடுற மனசு இதை பார்த்துதான் லவ் பண்ணேன்.
மாலினி:ஹ்ம்ம்,குட்.வேற என்னென்ன என்கிட்டே பிடிக்கும் உனக்கு?
ரமேஷ்:உன் பேச்சு,உன் டிரஸ்,உன் நடை,உன் லூக்குன்னு நெறைய பிடிக்கும்.அஹ,உன் தங்கச்சிய கூட பிடிக்கும்.
(பேக் டு ரியல் டைம் (back to real time)
வசந்த்:டேய்,இப்போ ஏன்டா தேவையில்லாம அவ தங்கச்சிய இழுத்த?
ரமேஷ்:என்னமோ கைய புடிச்சி இழுத்தா மாதிரி சொல்ற.ஆமா,நீ ஏன் எமொஷான் ஆகுற சம்பந்தமே இல்லாம?
வசந்த்:இருக்கு டா.அவளும் நானும் டூ இயர்ஸா லவ் பண்றோம்.
ரமேஷ்:இது எப்போடா நடந்துச்சு?
வசந்த்:உன் லவ் பத்தி பேச என்னை தூது விட்டல அவ ஏரியா பக்கம்.அப்போ அவளுக்காக வெயிட் பண்ண போய் இவ ஓகே ஆகிட்டா.
ரமேஷ்:எனக்கு உறுதுணையா இருப்பேன்னு பார்த்தா,உனக்கு ஒரு துணைய தேடிகிட்டியா.போ..போ..நல்லா வாழுங்கடா...என் மச்சினிச்சி பத்திரம் டா.
வசந்த்:டோன்ட் வொர்ரி.நான் பார்த்துகிறேன் சகலை.
(பிளாஷ் பேக் (flash back)
மாலினி:வாட் என் தங்கச்சியா?
ரமேஷ்:ஐயோ,அவங்களோட ஜாலியான குணம் பிடிக்கும்.அதை சொல்லவந்தேன்.
மாலினி:ரைட்.நான் உன்னை லவ் பண்ணனும்னா உன்கிட்ட சில விஷயங்கள் இருக்கணும்.
ரமேஷ்:என்னது கிரெடிட் கார்ட்டா?
மாலினி:என்ன கிண்டலா.நான் அடுத்தவங்க காசுல என்ஜாய் பண்ற ஆளு இல்லை.
ரமேஷ்:நான் அடுத்தவன் இல்லையே.
மாலினி:ஹ்ம்ம்...
ரமேஷ்:இல்லை,நீங்க லவ் பண்ண ஆரம்பிச்சா நான் அடுத்தவன் இல்லையே.உங்க ஆளு தானே.அதை சொன்னேன்.
மாலினி:ஹ்ம்ம்...முதல் விஷயம்.எப்பவும் என்கிட்டே உண்மையா இருக்கணும்.அடுத்து..
ரமேஷ்:உங்களுக்கு அடிமையா இருக்கனுமா?
மாலினி:வாட்?
ரமேஷ்:இல்லை உங்க அன்புக்கு அடிமையா இருக்கணுமான்னு கேட்டேன்.
மாலினி:ஸ்மார்ட்.என்னை நேசிக்கிற காதலனா இருப்பதை விட என்னை மதிக்கிற,புரிஞ்சிக்கிற நண்பனா இருக்கணும்.
ரமேஷ்:செம பாயிண்ட்...நிச்சயமா இருப்பேன்.
மாலினி:குட்.நானும் உனக்கு அப்படிப்பட்டவளா இருப்பேன்.தென்,வாரத்துக்கு டூ ஆர் த்ரீ டேஸ் அவுடிங் போகணும்.மாசத்துக்கு ஒரு வாட்டி குட்டி குட்டி கிப்ட்ஸ் பிரசென்ட் பண்ணனும்.தென்,ரெண்டு படமாச்சும் பார்க்கணும்.அப்பப்போ பீச்,ஷாப்பிங் னு சுத்தனும்.முக்கியமான விஷயம்,என் அனுமதி இல்லாம என்னை டச் பண்ண குடாது.ஏன்னா,எனக்கு இந்த கையோட கை உரசுறது,தோளோடு தோல் இடிச்சிகிறது,உன் மேல நான்..என் மேல நீ சாயஞ்சுகிறது எல்லாம் பிடிக்காது.ரொம்ப டிசன்ட்டா நடந்துக்கணும்.அப்புறம்...
ரமேஷ்:போதும்
(பேக் டு ரியல் டைம் (back to real time)
வசந்த்:ஏண்டா?
ரமேஷ்:முடிலடா...அவ கேட்டதை எல்லாம் செய்யுறதுக்கு நான் என்ன மாடர்ன் மில்லியனரா..மாடிவீட்டு பேச்சுலர் டா.வீட்டு வாடகைக்கே பாதி சம்பளம் போகுது.இதுல எங்கத்த அவ கேட்டதெல்லாம் செய்யுறது.வுட்டா அவளை லவ் பண்ண அவங்கப்பன் கிட்ட இருந்து நோ ஆப்ஜெக்க்ஷன் செர்டிபிகேட்(No Objection Certificate) வாங்கிட்டு வர சொனாலும் சொல்லுவாடா.
வசந்து:அதுக்கு?
ரமேஷ்:அதான் இதோட முடிச்சிக்க....
வசந்த்:டேய்...
ரமேஷ்:இருடா...முழுசா கேளு
(பிளாஷ் பேக் (flash back)
மாலினி:என்ன இதுக்கே போதுமுன்னு சொல்லிட்ட.இன்னும் சொல்ல நெறைய இருக்குப்பா.
ரமேஷ்:நீ சொல்றதுக்கு நெறைய இருக்கலாம்.ஆனா அதை செய்யுறதுக்கு என்கிட்டே எதுவும் இல்லையே...உன் அன்புக்கு அடிபணிய நான் ரெடி.ஆனா ஆசைக்கு சாரி.
மாலினி:ஹ்ம்ம் குட்.இதைதான் எதிர்பார்த்தேன்.சும்மா காதலிச்சேன்னு என்பதுகாக என் ஆசைக்கு வளைஞ்சு போகாம அன்புக்கு மட்டும் ரெடின்னு சொன்ன பாரு.இதான் உண்மையான காதல்...இதான் எனக்கு வேணும்.ஐ லவ் யு ரமேஷ்.
(பேக் டு ரியல் டைம் (back to real time)
வசந்த்:சூப்பர் டா,செம.கலக்கிட்ட சகலை.
ரமேஷ்:நான் எங்கட கலக்குனேன்.உண்மையான அன்பை தவிர வேற எதையுமே எதிர்பார்க்காத அவதான் கலக்கிட்டா.அவளை சந்தோஷ படுத்த முடிளைனாலும் கஷ்டபடுதாத மாதிரி வழ வைக்கணும் டா.வைப்பேன்.நல்லா வாழ்வோம்.அவளுக்கு எதாச்சும் குடுக்கணும் போலுருக்குடா.அதான் யோசிக்கிறேன் என்ன கொடுக்கலாம்னு.
வசந்த்:உன் ஞாபகார்த்தமா ஒரு நல்லா பட்டு புடவை ஒன்னு எடுத்து குடுடா.
ரமேஷ்:சூப்பர் டா.மங்களகரமா இருக்கும்ல.பின்னிட்டடா.என்கிட்டே ரெண்டாயிரம் தான் இருக்கு.நீ ஒரு பத்தாயிரம் குடுடா.வாங்கிடலாம்.
வசந்த்:என்னது நான்னா...ஒரு முக்கியமான மீட்டிங் இருக்குடா.உன்னை ஈவனிங் மீட் பண்றேன் டா.பை பை...
ரமேஷ்:டேய் டேய் வசந்த் நில்லுடா..சகலை சகலை
சிவகார்த்திகேயன், சிவா,சந்தானம் ஆகியோரின் கலவையாய் இருக்கிறது.. உங்கள் நகை வெளிப்பாடு! வாழ்த்துக்கள்!
ReplyDeleteதிரையில் பார்த்தால் மிக அருமையாக இருக்கும்!
இன்னும் கொஞ்சம் சாயல் மாத்தி முயற்சியுங்களேன்! எனக்கு எப்படி என்று சொல்ல தெரியவில்லை..
தொடரட்டும் உங்கள் முயற்சி!