கவுன்சிலர் கபாலி

மணி:ஹே நவுரு நவுரு...நம்ம அண்ணாத்த கண்ணம்மா பேட்டை கபாலி வந்துருக்காரு பாரு.

கபாலி:எல்லாருக்கும் வணக்கம்.

ஜான்:வணக்கம் அண்ணாத்த,உங்களை எங்கேயோ பார்த்துருக்கேன்.ஆனா யாருன்னு தான் சரியா தெரில.

மணி:அடேய் கயிதை,அண்ணாத்தைய தெரில.இவுருதான் நம்ம ஏரியா கவுன்சிலர்.

குப்பாத்தா:அவுரா இவுரு.கடசியா கவுன்சிலர் ஆனப்ப பார்த்தது.அதான் மறந்து போச்சு.

ஜான்:அது ஆச்சு பல மாசம்.என்ன அண்ணாத்த,அப்பப்போ இந்த பக்கம் வந்தாதான்னே ஞாபகம் இருக்கும்.

கபாலி:கொஞ்சம் தொகுதி பணி ஜாஸ்தி ஆகிடுச்சு.அதான் வரமுடில.

மணி:எந்த தொகுதி பணி அண்ணாத்த?

கபாலி:அட,நம்ம தொகுதிதான் பா,கண்ணம்மாபேட்டை.

மணி:அப்படியா அண்ணாத்த,ஆமா தொகுதி பணினா என்ன அண்ணாத்த?

கபாலி:அதுவா,அதான்யா இந்த தொகுதில இருக்கிற பிரச்சனைகளை கேட்டு சரி பண்றதுப்பா.

ரமணி:அப்படியா.ஆனா நீதான் அப்படி எதுவுமே பண்ணலியே  தலைவரே.

கபாலி:என்ன இப்படி சொல்லிடீங்க.இந்த தொகுதிக்காக இரவு பகல் பாராது எத்தனை உதவி செஞ்சுருக்கேன்.என்ன மறந்துடீங்களா.ஒன்னுகூடவா ஞாபகம் இல்லை.

ஜான்:என்ன தலைவரே கிண்டல் பண்றீங்க.உங்களையே ஞாபகம் இல்லைன்னு சொல்றோம்.அப்புறம் எப்படி நீங்க பண்ணது ஞாபகம் இருக்கும்.ஒருவேளை நீங்க எதாச்சும் பண்ணி இருந்தா ஞாபகம் இருந்துருக்கும்.என்னடா மணி?

மணி:ஆமாமா....நீங்கதான் நம்ம ஏரியா கவுன்சிலருன்னு உங்க வண்டில ஒட்டிக்கிற போஸ்டர பார்த்து தான் நானே கண்டுபிடிச்சேன் தலைவரே.ஆமா,இப்போ என்னத்துக்கு வந்துருக்கீங்க?

கபாலி:உங்க பிரச்சனைய கேட்டு சரி பண்ணலாம்னு வந்துருக்கேன்.உங்க குறைய கொட்டுங்க?

வடிவு:இந்தாங்கையா

கபாலி:என்னதிது..குறைய கொட்ட சொன்னா குப்பைய கொட்டுறீங்க.

வடிவு:இதான்யா எங்க குறை.

கபாலி:என்னம்மா,ஏரியா னா அங்க குப்பைக வரத்தான் செய்யும்.

ரமணி:ஆமாமா,ஏரியா னா அப்பப்போ குப்பைக வரதும்,கவுன்சிலருக வரதும் சகஜம் தானே.

கபாலி:என்னது...?

வடிவு:அட,நம்ம ஏரியா குப்பைனா பரவாலை.பக்கத்துல இருக்கிற அபார்ட்மென்ட்,கம்பெனின்னு எல்லாத்தோட குப்பையும் எங்க ஏரியால தான் வந்து விழுது.இதனால புள்ளைகளுக்கு கண்ட நோய்  எல்லாம் வருது.

கபாலி:நோய் வந்தா பக்கத்துல இருக்கிற அரசு ஆஸ்பத்திரில காமிக்கலாம் ல.

ஜான்:அங்க சுத்துற rat-ta பார்த்தா பயமா இருக்குங்கையா.

கபாலி:அப்போ,பிரைவேட் ஆஸ்பத்திரிக்கு போங்க.

வடிவு:அவங்க கேட்குற rate-ta பார்த்தா பயமா இருக்கேயா.

மணி:அதுகூட பரவாலை அண்ணாத்த,இந்த கொசுகடி தாங்க முடில.அதாலையே டிங்கு,கால்ரா நோய் எல்லாம் வருது.

கபாலி:கொசு மருந்து அடிக்க சொன்னேன்னே.

மணி:கொசுவுக்கு மருந்தடிக்க வந்தவன் அவனுக்கு மருந்தடிச்சிட்டு கவுந்துட்டான் தலைவரே.நாங்களும் மருந்து வாங்க முடில.விக்கிற விலைவாசில காய்கறி கூட வாங்க முடில.

கபாலி:அதான் உங்களுக்காக மிக குறைந்த விலையில் கோயம்பேடு மார்க்கெட்ல காய்கறி விக்குதே.

வடிவு:தினம் அங்கபோய் வாங்க முடில தலைவரே.

கபாலி:ஏன் வண்டி இல்லையா?

மணி:வண்டி கீது அண்ணாத்த.ஆனா,அதுல போட பெட்ரோல் தான் இல்லை.

கபாலி:ஏன்,அதான் பெட்ரோல் தட்டுப்பாட்டை சரிபண்ணிடோம்மே.

ஜான்:பெட்ரோல் தட்டுபாடு போனாலும்,அதோட விலை கட்டுப்பாடு இல்லாமதான போகுது.எங்களால அதை சமாளிக்க முடியுமா.போதா குறைக்கு நைட் ஆனா வண்டியோட இஞ்ஜின்,ஏன் வண்டியவே கூட ஆட்டைய போட்டிடுறாங்க.

கபாலி:போலீஸ்ல புகார் குடுக்கலாம்ல.

மணி:புகார் குடுத்தோம்.ஆனா போலீஸ் வரலை.

கபாலி:ஏன்?

மணி:அவரோட வண்டியையும் ஆட்டைய போட்டாங்களாம்.அதைத்தேடி போய்ட்டாரு.வண்டியோட சேர்த்து நகை,துணிமணி எல்லாம் போய்டுது ரொம்ப மாசமா?

கபாலி:எப்படி நடக்குதுன்னு கண்டுபிடிசீங்களா?

ஜான்:அது புலப்பட்டுருந்தா நாங்க ஏன் புலம்ப போறோம்.இருட்டை யூஸ் பண்ணி திருடுறாங்க.

கபாலி:அப்போ வீட்டுல லைட் போட்டு வைக்கவேண்டிதானே.வெளிச்சத்தை பார்த்தா ஆளு இருக்காங்கன்னு திருட வரமாட்டன்ல.

வடிவு:அதான் முடியாது.

கபாலி:அது ஏன்?

வடிவு:அதான் கரண்ட் இல்லையே.சாயங்கலாம் ஆறு மணிக்கு போனா விடிய காத்தால அஞ்சு மணிக்கு தான் வருது.

கபாலி:அது வரைக்கும் என்ன பண்ணுவீங்க?

மணி:பொம்பளைங்க கொசு அடிச்சிக்கிட்டு இருப்பாங்க.ஆம்புளைங்க சரக்கடிசிக்கிட்டு இருப்போம்.அந்த கேப்புல கொள்ளை அடிச்சிட்டு இருப்பாங்க.

கபாலி:ச்சா..இந்த ஏரியால நடக்கிற பிரச்சனை எல்லாம் எப்படி எனக்கு தெரியாம போச்சு?

ரமணி:இந்த ஏரியாவ நீங்க மறந்து போனதால தான் உங்களுக்கு தெரியாம போச்சு தலைவரே.

கபாலி:அப்படி சொல்லாதீங்க.உங்களுக்காகவும்,இந்த ஏரியாவுக்காகவும் நான் என் உயிரையும் குடுக்க தயாரா இருக்கேன்.என்ன செய்யணும் சொல்லுங்க.

ஜான்:அது ஒன்னும் இல்ல அண்ணாத்த,எங்க வளர்ச்சிக்கு கொடுத்த காசுல மீதிய கொடுத்தா நல்லாருக்கும்.

கபாலி:எந்த மீதி?

ஜான்:அதான் தலைவரே,அரசாங்கம் எங்களுக்காக ஒதுக்கின வளர்ச்சி நிதில,நீங்க வலைச்ச நிதி போக மீதி நிதி இருக்கும்ல.அதைதான் கேக்குறோம்.

கபாலி:அது பொய்.நான் அப்படி எதுவும் வலைக்களை.நான் உங்களை ஏமாத்துவேனா.நான் உங்களுக்காக வாழுறவன்.

மணி:எங்களுக்காக வாழுறவன் இல்லை,எங்களால வாழுறவன்.எங்க காசுல வாழுறவன்.

ஜான்:நீ எதுக்கு இங்க வந்தேன்னு தெரியாது பாரு.வரப்போற இடைத்தேர்தலுக்காக அடுத்த வாரம் முதல்வர் இந்த ஏரியாவ பார்வை இட வராங்கன்னு தெரிஞ்சதும் நீ இங்க வருவேன்னு தெரிஞ்சுடிச்சு.உன் சீட்டை ஸ்ட்ராங் ஆக்க எங்ககிட்ட போங் ஆடுறியா.ஓடுரா நாயே.அடுத்த வாரம் வர முதல்வருக்கும் இதே மரியாதைதான்.

குப்பாத்தா:பிரச்சனைன்னா வராத பயலுக,பிரச்சாரம் பண்ணுறதுக்கு மட்டும் வருதுக.அடுத்த வாட்டி வரட்டும்.வணக்கம் வைக்கிறவன்ன வகுந்திடுறேன் வகுந்து.

மணி:சரியா சொன்ன கிழவி,ஜெயிக்கிறதுக்கு முன்னாடி ஓட்டு கேட்குற கயிதை,ஜெயிச்ச பின்னாடி நோட் கேட்குது.இதுகளுக்கு ஓட்டு போட்ட நமக்கு ஓட்டு வீடு கூட மிச்சம் இல்லை.ஆனா இவனுகளுக்கு கார் என்ன,வீடென்ன விளக்கென்ன.வாடி வாயா உடைச்சிடுறேன்.

ரமணி:அவங்களை குறை சொல்லி எந்த பயனும் இல்லை.நோட்டுக்கு ஓட்ட விக்குறதையும்,இலவசத்துக்கு வசப்படாம மக்கள் கஷ்டம்,நஷ்டம் தெரிஞ்சுகிட்டு பேசுறவனை விட செயல்படுறவனை தலைவன் ஆக்குற அறிவை வளர்த்துக்கனும்.அப்போதான் இந்த நிலை மாறும்,நம்ம நிலை உயரும்.


Comments

  1. nice boss...nalla comedy ya irukku...
    =su_boss2

    ReplyDelete
  2. அருமை நிஜத்தை அப்படியே நக்கல் நைய்யாண்டியுடன் நகைச்சுவையோடு கொடுத்துள்ளீர்கள். நல்ல முன்னேற்றம் பத்திரிக்கைகளுக்கு சிறு கதைகள் எழுதுவதற்கு.அப்படியே இந்த உரையாடல்களுக்கு நடுவே இடம் பொருள் ஏவல் என்று கொஞ்சமா புகுத்தி விஸ்தார படுத்தினால் அதுவே நகைச்சுவை கலந்த நாட்டுக்கு தேவையான மெசெஜ் உள்ள சிறுகதையாகி விடும்.உரையாடல்களின் குறை என்னவென்றால், நீ, உன்,என்றால் கடைசிவரைக்கும் நீங்கள், உங்கள் என்று பிரயோகிக்க வேண்டும்.அதாவது சேரி பாஷை என்றால் கடைசிவரைக்கும் சேரி பாஷையா இருந்தால் சுவாரஷ்யமா இருக்கும். நன்றி வாழ்க வளர்க. (அப்புறம் உங்க பதிவில் கருத்து போட "prove that you are not a Robot" ன்னு கண்டிசன் போடுறத அகற்றிவிடுங்கள். கஷ்டமா இருக்கு)

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

Support The Champs

MA(DAI)YAN CALENDER

நானா நீயா