Posts

Showing posts from August, 2012

(வெட்)டீக்கடை

டீ கடையில் நடைபெறும் சூடான,(நகைச்)சுவையான உரையாடல். பழனி:யப்பா சாமிகண்ணு,சூடா ஒரு டீ. அன்வர்:ஹே ரெண்டா சொல்லுப்பா.... பழனி:யாரா அது.வாயா அன்வரு நீயா.என்னிக்காச்சும் சொந்த காசுல டீ வாங்கி குடிக்கிறியா  ஐயர்:அப்படி வாங்கி குடிச்சிட்டா வருண பகவான் பொழியோ பொழின்னு போழிஞ்சிட மாட்டாரோன்னோ பழனி:சரியாய் சொன்னேள் போங்கோ.அன்வர் என்னிக்காச்சும் நமக்கு வாங்கி கொடுபாருன்னு பாக்குறேன்.ஹ்ம்ம்..நடக்காது போலயே ஐயர்:கண்டிப்பா நடக்காது.வேணும் னா சாமிகண்ணு காச்சி குடுத்த டீ யா வாங்கி கொடுப்பானேன் ஒலிய,இவன் காசு குடுத்து டீ வாங்கி தரபோதில்லை.ஹிஹிஹெஹெஹிஹி.... பழனி:ஹஹஹஹஹஹஹா சூப்பரா சொன்னீங்க ஐயரே..கை கொடுங்கோ.. ஐயர்:அட இதுக்கு எதுக்குப்பா கையெல்லாம் குடுதிண்டு.வேணும்னா ஒரு டீ சொல்லு. அன்வர்:ஹஹஹஹஹஹஹஹஹா....யோவ் பழனி.இதுக்கு நான் பரவாலையா....ஹஹஹஹா... தாமஸ்:என்னய்யா ஒரே சிரிப்பா இருக்கு.என்ன சங்கதி. பழனி:ஒன்னும் இல்லை தாமஸ்,நம்ம ஐயர்,அன்வர் ல யாரு டீ வாங்கி தரபோறதுன்னு தான் பஞ்சாயத்து. தாமஸ்:ரெண்டுமே இந்த ஜென்மத்துல நடக்காது.ஹஹஹஹஹஹஹா.....சரி,இன்னைக்கு நியூஸ் பார

ஊனத்தின் அழகு

வாழ்வின் ஒவ்வொரு நிமிடங்களையும் முழுதாய் அனுபவிக்கும் குழந்தைகளும்,வாழ்வை முழுதாய் அனுபவித்த குழந்தைகளான முதியோரும் மாலை பொழுதின் மயக்கத்திலே உற்சாகத்தோடு இருந்தனர் மலர் பூங்காவில். அதே பூங்காவின் ஒரு ஓரத்தில் வானத்தையே உடையாய் உடுத்தியது போன்ற நீல நிற உடையில்,மேகக்கூட்டமாய் வெள்ளை நிற துப்பட்டாவில் ஒரு வெண்புறா போன்ற தேவதையாய் சந்தியாவும்,அவள் எதிரில் சுமாரான தோற்றமும்,ஆடையுமாய் மெல்லிய புன்னகையுடன் ராஜுவும் உரையாடிகொண்டிருந்த போது அவர்களை நோக்கி பளிச்சென ஆடையுடுதிக்கொண்டு வந்தான் பிரவீன். பிரவீனும்,ராஜுவும் ஒருவருக்கு ஒருவர் பழக்கமில்லாதவர்கள்.அனால் அவர்களுக்கு இடையே உள்ள ஒரே சம்பந்தம் சந்தியா.இருவரும் அவளை காதலித்தனர்.ஆனால் அவர்களில் சந்தியா காதலித்தது ராஜுவை.அதற்கான காரணத்தை கண்டறியவே பிரவீன் வந்துள்ளான். பிரவீன்:ஹாய் சந்தியா.... சந்தியா:ஹாய் பிரவீன்... பிரவீன்:உன்கூட கொஞ்சம் பேசணும். சந்தியா:ஹ்ம்ம் பேசலாம் வா. பிரவீன்:உனக்கு தெரியும் நான் உன்னை காதலிப்பதை. சந்தியா:நான் ராஜூன்னு ஒருத்தரை காதலிப்பதும் உனக்கு தெரியும். பிரவீன்:யாஹ் யாஹ் ஐ நோவ் அபௌட் இட்.மே ஐ நோவ் மேட் யு டு லவ் ஹிம்

சென்னை - ஓர் உலகம்.

மதராசபட்டினம் என்ற மெட்ராஸ் என்கிற சென்னை.பல கோடி ஜனங்களின் இதய துடிப்பு.கனவை நிறைவேற்ற வாழ்பவர்க்கும்,கனவில் வாழ்பவர்க்கும் இடம் அளிக்கும் ஒரு வசந்த மாளிகை. உலகெங்கும் பல நாடுகளில்,நகரங்களில் வெடிகுண்டும்,தீவிரவாதமும் தலை தூக்கி தாண்டவம் ஆடும் காலகட்டத்திலும் எந்த தொல்லையும் இல்லாம இருக்கும் ஒரே நகரம் சென்னை. அதற்க்கு காரணம் ஒருவகையில் நம் அரசியல் தலைவர்கள் விடும் அறிக்கை குண்டுகள் கூட இருக்கலாம்.ஒருவர் மீதி ஒருவர் மாறி மாறி வீசும்போது கத்தி இன்றி,ரத்தம் இன்றி யுத்தம் ஒன்று நடக்குது என்ற முன்னோர் சொல்லே நினைவுக்கு வருகிறது(எதுக்கு சொன்னது எதுக்கு யூஸ் ஆகுது பாருங்க). வயசு வித்தியாசமின்றி அணைத்து வயதினரும் வருகை புரியும் மெரினா கடற்கரையில் கடலும் கடலை சார்ந்த நிலபரப்பில் எந்த பரபரப்பும் இன்றி அடிக்கிற வெயிலிலும் அசராம ரொமேன்ஸ் பண்ணும் இளசுகள் ஒரு பக்கம்,கடலையே கடவுளாய் என்னும் மீனவ மக்கள் ஒரு பக்கம்.மண்ணிலும்,கடல் நீரிலும் விழுந்து புரண்டு உடையில் கறை கொண்டாலும்,உள்ளத்தில் கறை கொள்ளா குழந்தைகள் கூட்டம் ஒரு பக்கம்.அக்குழந்தைகளின் எதிர்காலத்தை எண்ணி கவலையும்,அவர்களின் சந்தோஷத்தை கண்டு ம

அரட்டை அரசவை

அந்தகால அரசவையில் இந்த கால நாட்டு நடப்புகளை அக்கால அரசரும்,மந்திரியும் சுத்த தமிழிலும்,இக்கால மக்கள் சென்னை தமிழிலும் பேசும் கோமாளித்தனமான உரையாடல்  காவலர்:ராஜாதி ராஜா,கூஜாதி கூஜா,ராஜா மார்தாண்டா,வாசல் படி தாண்டா மாமன்னர் மாமா மன்னர் வரார் வரார் வரார்...... மன்னர்:அனைவருக்கும் என் வணக்கம்... மந்திரிகள்:வணக்கம் தலைவா மன்னர்:மந்திரியாரே..நாட்டு மக்கள் அனைவரும் செழிப்பாக உள்ளனரா.. manthiri:அனைவரும் கடுப்பாக உள்ளனர் மன்னா மன்னர்:ஏன்..என்ன பிரச்சனை? கபாலி:அத்த நான் சொல்றேன் தலைவா... மன்னர்:தாங்கள் யாரு...தங்கள் குறை என்னவோ? கபாலி:என் பேரு கபாலி.எங்க ஏரியால கொசு தொல்லை.  மன்னர்:மின்விசிறி உபயோக படுத்தி கொசுவை விரட்ட வேண்டித்தானே. கபாலி:அதான் மின்சாரம் இல்லையே.அப்புறம் எங்கத்த மின்விசிறி ஓடும்.கை விசிறி தான் ஓடிகிட்டு  அஹஹா ஆடிகிட்டு இருக்கு. மன்னர்:அப்போ,வெளிய வந்து இயற்கை காற்றில் உலவ வேண்டித்தானே. மந்திரி:அதுவும் முடியாது மன்னா...பருவ மழை பல்டி அடித்தால் வெயில் வெளுத்து கட்டுகிறது. மன்னர்:அப்போ வெயிலுக்கு இதமாக மோர் அருந்தவேண்டிதானே.
பஞ்சாயத்து:மைக் டெஸ்டிங் ஒன்...டூ...த்ரீ... முத்து:ஏலே...பஞ்சாயத்து இங்கிலீஷ் பேசுது டோய்... பஞ்சாயத்து:யார அவன்.பல்ல பேத்து புடுவேன்.நம்ம ஊரு கோவில் திருவிழாவுக்கு வந்துருக்கிற பதினெட்டு பட்டி ஊரு சனங்களுக்கும் வணக்கம்.எல்லா அங்காளி பங்காளி எல்லாம் பகை,வஞ்சத்தை எல்லாம் தீ ல போட்டு கொளுத்தி புட்டு ஒன்னுகொன்னா வாழனும்.சந்தோசமா கொண்டாடுங்க. சுப்பு:என்ன கவுண்டரே,கருத்து எல்லாம் சொல்லுறீக....கவலை படாதீங்கப்பு....இந்த வருஷமும் நீங்கதான் நம்ம ஊரு பஞ்சாயத்து போர்டு சேர்மன்..ஹஹஹஹஹா பூசாரி:ஆத்தா..நம்ம ஊரு செழிக்க,எல்லாருக்கும் நலம் கிடைக்க....வயக்காடு எல்லாம் பச்சை பசேல்ன்னு  கிடக்க மாதம் மும்மாரி மழை பெய்யணும் ஆத்தா... சோமு:முள்ளமாரிகளா இருக்கிற ஊருல எப்படி மும்மாரி மழை பெய்யும்.அதுகள திறத்தி புட்டாலே மழை கொட்டோ கொட்டுன்னு கொட்டும் சாமி. கண்ணாத்தா:எடுபட்ட பயலுகளா,ஆத்தா வ சீண்டுனா சீக்கு வந்து சின்னபின்னமா ஆவீங்கலே  சோமு:அப்போ ஆத்தா வ கொஞ்சுனா கொக்கு வந்து கொழுக்கு மொழுக்குன்னு ஆவோமோ....போ கிழவி..சும்மா அளக்காத. வாத்தி:ஹஹஹஹா...ஏன் ஆத்தா...தப்பு பண்ணுறவன் தலைமுறை