Posts

Showing posts from October, 2012

தொ(ல்)லைப்பேசி

 கோகுல்:டேய் நீ கொடுத்த அட்ரஸ் சரிதானா? மோகன்:டேய்..அஹ.அஹ,,என்ன டவுட்டா..அட்ரஸ் குடுத்தது நான்டா. கோகுல்:அதான் கேட்கிறேன் சரியானு. மோகன்:ஒய்,என்ன நக்கலா? கோகுல்:இல்லடா தேவையில்லாம வேற எங்காச்சும் போய்ட  கூடாதுல.அதான் கேட்டேன்.சரி,அங்க போயட்டபிறகு கால் பண்றேன்.பை. மோகன்:மச்சான்,அவகிட்ட லவ் சொன்ன பிறகு ட்ரீட் டா. கோகுல்:லவ் சொன்னதுக்கேவா? மோகன்:அட,நமக்கெல்லாம் இதுவே ஜாஸ்திடா.சரி,முடிச்சிட்டு கால் பண்ணு.ஆல் தி பெஸ்ட்.பை. (செல்லும் வழியில் ஒரு போன் கால்) கோகுல்:ஹலோ.. ப்ரியா:ஹலோ..என்ன சார்.நேத்து இவனிங் வரேன்னு சொல்லிட்டு வரவே இல்லை. கோகுல்:ஹே இல்லப்பா.நேத்து நம்ம மோகன் கீதா அட்ரஸ் வாங்குறதுக்காக போனான்.அதான் அவனை பார்க்க போனேனா.அப்படியே மறந்துட்டேன்.சாரி. ப்ரியா:ஹ்ம்ம்..ஹ்ம்ம்..இருக்கட்டும்.இருக்கட்டும்.இப்பவே எங்களை மறந்துட்ட.லவ் ஓகே ஆச்சுனா கேக்கவா வேணும். கோகுல்:ஹே என்னப்பா இப்படி சொல்லிட்ட.நான் போய் உன்ன மறப்பேனா? ப்ரியா:அதான் நேத்து மறந்துட்டியே. கோகுல்:அட,நேத்து என்ன சொன்னேன்? ப்ரியா:இவனிங் வரேன்னு சொன்ன. கோகுல்:அஹ,இவனிங் வரேன்னு சொன்னேன்.ஆனா என்னைக

நானா நீயா

அனைவருக்கும் வணக்கம்.ஊரில் உள்ள பிரச்சனைகளை,மக்கள் கண்ணோட்டத்தில்,அலசி,நனைத்து,பிழிந்து,துவைத்து இஸ்திரி போடும் இந்நிகழ்ச்சி "நானா நீயா".நான் உங்கள் குல்பிநாத்.இன்று நாம் அவ்வாறு அலச போகும் பிரச்சனை "சமுதாயத்தில் மரியாதை கெட்டவர் திருடனா அல்லது பிச்சைக்காரனா". ரெண்டு தரப்புலயும் பார்த்தீங்கன்னா,போக்கிடமின்றி போஜனத்துக்கு யாசகம் கேட்டு வயது வரம்பின்றி,ஜாதி மத பேதமின்றி,சந்து பொந்து சச்சரவு இன்றி எங்கேயும்,எப்போதும் அயராமல்,அசராமல் பிச்சை எடுப்பவர்கள் இவர்கள்.இங்க பொழுதோடு விளையாடி,புறம்போக்கோடு உரையாடி,மக்களிடம் களவாடி காலத்தை ஓட்டும் கள்வர்கள் இவர்கள்.நீங்க சொல்லுங்க... கொக்கி:நான்தான் கொக்கி குமார்.மீனம்பாக்கத்துல இருந்து மீனாட்சி காலேஜ் வரைக்கும் பல ஏரியால திருடுறேன் சார்.நேரம் காலம் பார்க்காம,பையையும்,கையையும் நம்பி பொழப்பு நடத்துறோம். பிச்சைமுத்து:நாங்க மட்டும் லேப்டாப்,ஐ-பேட் வச்சுகிட்டா பிச்சை எடுக்கிறோம். நாங்களும் வெத்துப்பை ,வெறுங்கையுமா தான் பிச்சை எடுக்குறோம். கேடிமணி:அட,உங்கள மாதிரி உழைக்க வக்கில்லாம,ரோடு ஓரமா உக்காந்து பிச்சை எடுக்கிறவங்கள நாங்

பார்த்தேன் தவித்தேன்

என் உச்சி மண்டைல சுர்ருங்குது ஐஸ் குச்சி வெயில்ல உருகிறது   என் மொபைல் சைலன்ட்ல அலறுகிறது எடுத்து பார்த்தா 32  மிஸ்டு கால் எகிறுகிறது உறுகுற போதும் அந்த ஐஸ் குச்சிய உச்சிகொட்டி,சப்புகொட்டி ருசி பார்க்கும்போது சில்லென்று ஒரு Air     கும்மென்று ஒரு பிகரு வெட்ட வெளியிலே வெளுக்கிற வெயிலிலே வெள்ளாவில வச்சி வளர்த்தா மாதிரி ஒரு மாதுரி அளவிலே அவள் ஹன்சிகா உயரத்திலே அவள் தன்ஷிகா சிரிக்கையில் கூல் ஜோதிகா முறைக்கையிலே தூள் ஸ்வர்ணாக்கா என் headlight   கண்களில் அவள் highlight அழகுகள் அரங்கேற அந்த sunlight  ஒளியிலே அவள் magnite   விழிகள் விளையாட அடகுக்கடை பொட்டியில் அமுக்குன வட்டியில் வாங்குன வண்டியில் ஏறி அவள் அருகில் சென்று ஓரக்கண்ணில் அவள் காந்தகண்ணை கண்டேன். அவளும் நோக்கினால் அருகில் அவள் அண்ணன்னும் நோக்கினால் ஓடிவந்து ஓங்கி அடித்த ஒன்ரா டன் அடியால் என் ஒன்ரகன் பார்வை பறிபோக ஐயகோ னு நான் அலறியபடி அவள் கை பிடிக்க என்னங்கோ னு அவள் கை பிடித்த கணவனை அழைக்க  மனம் முடித்த மணாளனும்,மதம் பிடித்த மாங்கா மடையர்களும் என் விலா எலும்பில் விழா எடுத்து கொண்டாட அவர்க

(க்)ராக் ஜாக்

 நடு கடலிலே கப்பல இறங்கி தள்.. ராக்:ஹலோ..இட்ஸ் ராக்குமுத்து ஸ்பீக்கிங்.நீங்க யாரு? ஜாக்:ஹஹஹஹஹஹா....நான் யாருன்னு தெரிதா? ராக்:இப்படி ஒரு கேவலமான சிரிப்பா இதுக்கு முன்னாடி கேட்டதில்லை.ஒரு வேலை..ஹ்ம்ம்..   டேய்,பத்தாவது படிக்கும்போது பக்கத்துக்கு வீட்டு பவுனோட கவுன திருடி செருப்படி வாங்குன செந்தில் தானே. ஜாக்:நான் பத்தாவது படிச்சதில்லை. ராக்:இல்லையா..ஹ்ம்ம்.அஹ,அப்போ அஞ்சாவது படிக்கும்போது ஒரு ஐஸுக்கு சண்டைபோட்டு ரெண்டு அய்சும் தொலைச்ச அய்யாசாமி தானே. ஜாக்:ஹஹஹா...நான் அஞ்சாவதும் படிச்சதில்லை. ராக்:அதுவும் இல்லையா..அப்போ ரெண்டாவதுல ரெட்டைஜடை ரேணுகாவ கண்ணடிச்சு கன்னத்துல அடி வாங்குன கண்ணன் தானே. ஜாக்:ஹிஹிஹி...நான் ரெண்டாவதும் படிக்கலை. ராக்:அப்போ என்னதாண்ட படிச்சிருக்க? ஜாக்:நான் படிச்சதே இல்லை.ஏன்னா பள்ளிக்கூடம் போனதே இல்லை. ராக்:இத முதலயே  சொல்லவேண்டிதான ஜாக்:இத முதலயே கேட்கவேண்டிதானே ராக்:யாருகிட்ட பேசுறேன்னு தெரியாம பேசிகிட்டு இருக்க ஜாக்:நீகூட தான் யாருகிட்ட பேசுறேன்னு தெரியாம பேசிக்கிட்டு இருக்க.ஹஹஹஹா...நாந்தாண்ட உன்னால கைது செய

கை கொடுக்கும் கை

சாம்:இன்னைக்கு வெயில் ஜாஸ்திடா அசோக்:வேலையும் ஜாஸ்திடா..ஒரு ப்ராஜெக்ட முடிக்க எத்தன மாசம் முக்க வேண்டிருக்கு. சாம்:எத்தன மாசம் முக்குன? அசோக்:அது..அதுலாம் பார்த்தா வேலை பார்க்க முடியுமா? சாம்:அப்புறம் ஏன் இந்த வீண் விரக்தி? அசோக்:சும்மாத்தான்...சரி,சரி....யாருப்பா அங்க? ஜீவா:சார்..என்ன வேணும் சார்? அசோக்:உனக்கு என்ன வேணும்டா? சாம்:எனக்கு ரெண்டு பரோட்டா.. அசோக்:எனக்கு ஒரு மீல்ஸ். ஜீவா:ரைட் சார். சாம்:நாளைக்கு சனிக்கிழமை.அரை நாள் தான்.ஆபிஸ் முடிஞ்ச கையோட எங்காச்சும் வெளிய போலாமா? அசோக்:எங்கடா போலாம்? சாம்:ஏதாச்சும் படத்துக்கு? அசோக்:ஹ்ம்ம்...நம்ம ஆக்ஸன் ஸ்டார் அம்ஜத் கான் நடிச்ச " லூஸ் பாண்ட்௦௦ 007" பார்க்கலாமா? சாம்:அதுக்கு புல் டே ஆப்பிஸ்லையே இருக்கலாம். அசோக்:அப்போ ரோமென்ஸ் ஸ்டார் ரோஹித் நடிச்ச "நைனாவும் மைனாவும்" பார்க்கலாமா? சாம்:அவன் படத்துக்கு ஒ.சி ல டிக்கெட் கொடுத்தாலும் போகமாட்டேண்டா. அசோக்:நடிப்பை புழியுறேன்னு பேருல நடிகைய போட்டு புழிவான். சாம்:அப்போ பீச்சுக்கு போலாமா? அசோக்:நாம