Posts

Showing posts from September, 2012

நாட்டாமை நாக்-அவுட்

நாட்டாமை:எல்லாரும் இங்க எதுக்கு கூடி இருக்கீங்கன்னு தெரியுமா? காத்தமுத்து:தெரியாது சாமி.ஊருல கரண்ட் இல்லை.அதான் வேக்காடா இருக்கேன்னு இங்க வந்தோம் சாமி.சட்டு புட்டுன்னு ஆரம்பீங்க.பொழுது போகணும். நாட்டாமை:நம்ம பொன்ராசு பெத்த சின்ராசு...நம்ம ராக்காயி பெத்த மூக்காயிய தூக்கிட்டு போய் மக்கள்:தூக்கிட்டு போய்... நாட்டாமை:தூக்கிட்டு போய் குளத்துல போட்டான். மக்கள்:அவ்வளவு தானா... வெள்ளைச்சாமி:அடச்சா...இதுக்கா கூட்டத்தை கூட்டுனீங்க...குளத்துல தானே போட்டான்.கெடுத்தா போட்டான்...இதுல என்ன தப்பு? நாட்டாமை:என்ரா சொல்லிபோட்ட நீயு.தூங்குறதுக்கு தரையும்,தூக்குறதுக்கு முறையும் முக்கியம் டா. காத்தமுத்து:அவனுக்கும் முறை இருக்கிறதாலதான் அவன் முறை மாமன் யா. நாட்டாமை:என்னது அவன் முறை மாமன் னா...(ஆகா முறை தெரியாம முறைசிட்டோமே)..அப்படியே முறை இருந்தாலும் பண்பாடு வேண்டாம்.இப்படிதான் போன வாரம்,வீட்டுல பங்காளிகளோட ஆட்டம் போட்டு இருக்கான்.வயசுக்கு வந்த தங்கச்சிய வீட்டுல வச்சுக்கிட்டு இப்படியா ஆட்டம் போடுறது. சின்ராசு:அதான் அவளை வெளிய அனுப்பிட்டு ஆட்டம் போடலாம்னு சொன்னேன்.பய

கவுன்சிலர் கபாலி

மணி:ஹே நவுரு நவுரு...நம்ம அண்ணாத்த கண்ணம்மா பேட்டை கபாலி வந்துருக்காரு பாரு. கபாலி:எல்லாருக்கும் வணக்கம். ஜான்:வணக்கம் அண்ணாத்த,உங்களை எங்கேயோ பார்த்துருக்கேன்.ஆனா யாருன்னு தான் சரியா தெரில. மணி:அடேய் கயிதை,அண்ணாத்தைய தெரில.இவுருதான் நம்ம ஏரியா கவுன்சிலர். குப்பாத்தா:அவுரா இவுரு.கடசியா கவுன்சிலர் ஆனப்ப பார்த்தது.அதான் மறந்து போச்சு. ஜான்:அது ஆச்சு பல மாசம்.என்ன அண்ணாத்த,அப்பப்போ இந்த பக்கம் வந்தாதான்னே ஞாபகம் இருக்கும். கபாலி:கொஞ்சம் தொகுதி பணி ஜாஸ்தி ஆகிடுச்சு.அதான் வரமுடில. மணி:எந்த தொகுதி பணி அண்ணாத்த? கபாலி:அட,நம்ம தொகுதிதான் பா,கண்ணம்மாபேட்டை. மணி:அப்படியா அண்ணாத்த,ஆமா தொகுதி பணினா என்ன அண்ணாத்த? கபாலி:அதுவா,அதான்யா இந்த தொகுதில இருக்கிற பிரச்சனைகளை கேட்டு சரி பண்றதுப்பா. ரமணி:அப்படியா.ஆனா நீதான் அப்படி எதுவுமே பண்ணலியே  தலைவரே. கபாலி:என்ன இப்படி சொல்லிடீங்க.இந்த தொகுதிக்காக இரவு பகல் பாராது எத்தனை உதவி செஞ்சுருக்கேன்.என்ன மறந்துடீங்களா.ஒன்னுகூடவா ஞாபகம் இல்லை. ஜான்:என்ன தலைவரே கிண்டல் பண்றீங்க.உங்களையே ஞாபகம் இல்லைன்னு சொல்றோம்

காதல் கீதை

வசந்த்:என்ன ரமேஷு,எப்பவும் பாலிஷ் பண்ண வொய்ட் ஹவுஸ்(white house) மாதிரி பளிச்சுன்னு இருப்ப.இப்போ ப்யூஸ் போன லைட் ஹவுஸ்(light house) மாதிரி டல்லா இருக்க.என்ன ஆச்சுடா? ரமேஷ்:நீ எல்லாம் என்னை கலாயக்குற நிலைமை வந்துடுச்சே.என் ஆளு மாலினி இருக்காளே வசந்த்:உன் ஆளா,என்னமோ அவளும் உன்னை லவ் பண்ற மாதிரி சொல்ற. ரமேஷ்:சரி..நான் லவ் பண்ற மாலினி இருக்காளே.. வசந்த்:நீ மாலினிய மட்டுமா லவ் பண்ண? ரமேஷ்:டேய்,என்ன நக்கலா.பேச விடுடா....நேத்து என்னை பார்த்து பேசணும்னு சொன்னா.நானும் சீக்கிரம் கிளம்பி அவ சொன்ன இடத்துக்கு டான்னு பத்து மணிக்கெல்லாம் போனேன்னா... (பிளாஷ் பேக் (flash back ) ரமேஷ்:ஹாய் மாலினி..சாரி,ரொம்ப லேட் ஆகிடுச்சா. மாலினி:இல்லை.ஜஸ்ட் ஒன் அவர் தான்..ஏன் லேட்? ரமேஷ்:பைக் பஞ்சர் ஆகிடுச்சு. (பேக் டு ரியல் டைம் (back to real time) வசந்த்:ஹே நிறுத்து..நிறுத்து.. ரமேஷ்:எத வண்டியவா..அதான் ஆல்ரெடி பஞ்சர் ஆகி நின்னுடுச்சே. வசந்த்:அட,அத சொல்லலை.உன்கிட்ட தான் வண்டியே இல்லையே.அப்புறம் எப்படி பஞ்சர்? ரமேஷ்:அதான் சொல்ல வரோம்ல.அதுக்குள்ள என்ன அவசரம்..

நட்பின் காதல்

ராசு:மச்சான் இன்னைக்கு ரெண்டுல ஒன்னு தெரிஞ்சாகனும்..உனக்கு அவ வேணுமா இல்லை நான் வேணுமான்னு. ரதி:இதுல என்ன சந்தேகம்,அவருக்கு நான்தான் சரி.அவருக்காக நான் உசுரையும் கொடுப்பேன்.நீ என்ன கொடுப்ப? ராசு:அவனுக்காக என் ட்ரவுசரையும் கொடுப்பேன். ரதி:ட்ரவுசரா..அதவச்சி என்ன பண்ண முடியும்? ராசு:உன் உசுர வச்சி மட்டும் என்ன பண்ண முடியும்.ஊறுகா கூட போட முடியாது.ஆனா,என் ட்ரவுசர வச்சி அவன் மானத்தை காப்பாத்த முடியும்.உசுர விட மானம் பெருசு.சோ,உன் உசுர விட என் ட்ரவுசர் பெருசு.அப்படி பார்த்தா,உன்னவிட நான்தான் பெருசு. ரவி:நீங்க ரெண்டு பேருமே எனக்கு பெருசு.உங்க ரெண்டு போரையும் என்னால பிரிச்சி பார்க்க பிடிக்கலை. ராசு:எனக்கு உங்க ரெண்டு போரையும் சேர்த்து பார்க்க பிடிக்கலை. ரதி:எனக்கும் ரெண்டு பேரையும் சேர்த்து பார்க்க பிடிக்கலை. ராசு:பார்த்தியா ரவி,அவளே ஒத்துகிட்டா.குட். ரதி:ஹே,நான் சொன்னது உங்க ரெண்டு பேரையும் சேர்த்து பார்க்க பிடிக்கலேன்னு. ரவி:ஐயோ,உங்க ரெண்டு பேருக்குள்ள அப்படி என்னதான் பிரச்சனை. ராசு:நீதான் பிரச்சனை.அவமேல நீ வச்சு இருக்கிற காதல்தான் பிரச்சனை.உன் பக

அரசு அது பழசு

நாட்டு நிலவரங்களை ஆளுங்கட்சி மற்றும் எதிர் கட்சியை சேர்ந்த "முக்க்கிய" அமைச்சர்களோடு கலந்து விவாதிக்கும் நிகழ்ச்சி.பங்கு பெறுவோர் க.க.போ கழகத்தின் செயலாளர் திரு.இசக்கிமுத்து மற்றும் கு.க.போ கழகத்தின் செயலாளர் திரு.கசக்கிமுத்து அவர்களுடன் நமது சிரிப்பு நிருபர் குமரிமுத்து. குமரி:இஹஹஹ்ஹஹஹஹஹஹஹா..வணக்கம் நேயர்களே...இன்று நம்முடன் கலாய்க்க வந்துருப்பது க.க.போ செயலாளர் இசக்கியும்,கு.க.போ செயலாளர் கசக்கியும்.இருவருக்கும் வணக்கம். இசக்கி,கசக்கி:வணக்கம். குமரி:முதலில் க.க.போ கட்சியின் தேர்தல் வாக்குறுதிகளை செயல்படுத்தவில்லை என்ற குற்றசாட்டை பற்றி பார்ப்போம். இசக்கி:அது என்னன்னா.. கசக்கி:அத நான் சொல்றேன். இசக்கி:பார்தீங்களா,அவர் வாய்ப்பு வருவதுக்கு முன்னரே அடுத்தவர் வாய்ப்பை பறிக்கும் இந்த செயலே அவருடைய குறுகிய மனப்பான்மையை குத்திகாட்டுகிறது என்பதை நான் உங்களுக்கு சுட்டிக்காட்டுகிறேன்.அதான் நாங்க சொல்றோம்ல. குமரி:அவரே சொல்லட்டும் திரு.கசக்கி அவர்களே. இசக்கி:நாங்கள் சொன்னதை சொன்னபடி நிறைவேற்றினோமே.கல்வியை கட்டாயமாக்கினோம். கசக்கி:அஹ நல்லா ஆக்குனீங்க.கல்விய கட்டாயாமாக்குங்கன்னா

கலாட்ட கல்யாணம் - 3.

கவுண்டர்:யாரா இங்க வெள்ளைச்சாமி? செந்தில்:அண்ணே..வணக்கம் னே.நான்தான் வெள்ளைச்சாமி. கவுண்டர்:என்னது நீ வெள்ளைசாமியா..வெளுத்து போன சாமி மாதிரி இருக்க...அப்போ நீதான் அஞ்சலிய கட்டிக்க போற மாப்பிள்ளையா? செந்தில்:எஸ்.வாட் யு வான்ட்? கவுண்டர்:பெரிய ஜாக்சன் துறை.இங்கிலிஷ்ல தான் பேசுவாரு.எட்டி வுட்டா எட்டு ஊரு தள்ளிபோய் உழுவ.ஆமா,அப்படி என்ன என் மாப்புள வேலு கிட்ட இல்லாதது உன்கிட்ட இருக்குன்னு உன்னை மாப்பிள்ளை ஆக்குனான் அந்த குருவி கூடு தலையன். விஜயகுமார்:நிறுத்துரா..... கவுண்டர்:இங்க என்னத்த ஓட்டறாங்கன்னு நிறுத்த சொல்ற.இதான் இவன்கிட்ட இருக்கிற கெட்ட பழக்கம்.பக்கத்துலையே நின்னாலும் என்னமோ பத்து ஊரு தள்ளி நிக்குறா மாதிரி கத்தி கூப்பிடுறது. விஜயகுமார்:பேசாதடா.என்ர சொன்ன,யென்ற மாப்பிளைகிட்ட என்ன இருக்குன்னா கேட்ட.நானூறு ஏக்கர் நஞ்சை,அறநூறு ஏக்கர் புஞ்சை.எழுபது தென்ன மரம்.வாழை தோப்பு,மாந்தோப்புன்னு இப்படி ஏகப்பட்ட சொத்து கிடக்குதுடா..உங்ககிட்ட என்னடா இருக்கு? கவுண்டர்:இதென்ன பிரமாதம்.எங்க ஊருல ஆயிரம் ஏக்கர் நஞ்சை,ரெண்டாயிரம் ஏக்கர் புஞ்சை,நூறு தென்ன மரம்.அஞ்சு வாழை தோப்பு.எட்டு மாந்தோப்புன்னு ஏகப்ப