Posts

Showing posts from August, 2014

சென்னை - தாய் நகரம்

மதராசபட்டினம் என்ற மெட்ராஸ் என்கிற சென்னை.பல கோடி ஜனங்களின் இதய துடிப்பு.கனவை நிறைவேற்ற வாழ்பவர்க்கும்,கனவில் வாழ்பவர்க்கும் இடம் அளிக்கும் ஒரு வசந்த மாளிகை. உலகெங்கும் பல நாடுகளில்,நகரங்களில் வெடிகுண்டும்,தீவிரவாதமும் தலை தூக்கி தாண்டவம் ஆடும் காலகட்டத்திலும் எந்த தொல்லையும் இல்லாம இருக்கும் ஒரே நகரம் சென்னை. அதற்க்கு காரணம் ஒருவகையில் நம் அரசியல் தலைவர்கள் விடும் அறிக்கை குண்டுகள் கூட இருக்கலாம்.ஒருவர் மீதி ஒருவர் மாறி மாறி வீசும்போது கத்தி இன்றி,ரத்தம் இன்றி யுத்தம் ஒன்று நடக்குது என்ற முன்னோர் சொல்லே நினைவுக்கு வருகிறது(எதுக்கு சொன்னது எதுக்கு யூஸ் ஆகுது பாருங்க). வயசு வித்தியாசமின்றி அணைத்து வயதினரும் வருகை புரியும் மெரினா கடற்கரையில் கடலும் கடலை சார்ந்த நிலபரப்பில் எந்த பரபரப்பும் இன்றி அடிக்கிற வெயிலிலும் அசராம ரொமேன்ஸ் பண்ணும் இளசுகள் ஒரு பக்கம்,கடலையே கடவுளாய் என்னும் மீனவ மக்கள் ஒரு பக்கம்.மண்ணிலும்,கடல் நீரிலும் விழுந்து புரண்டு உடையில் கறை கொண்டாலும்,உள்ளத்தில் கறை கொள்ளா குழந்தைகள் கூட்டம் ஒரு பக்கம்.அக்குழந்தைகளின் எதிர்காலத்தை எண்ணி கவலையும்,அவர்களின் சந்தோஷத்தை கண்ட