MA(DAI)YAN CALENDER

Dec 21,2012 - உலகத்தின் இறுதிநாள்.ஆம்,அவ்வாறு தான் மாயன் காலன்டர்  கூறியதாக உலகம் சொல்கிறது.நெருப்பு குழம்பினை உள்ளடக்கி வைத்துருக்கும் எரிமலைகள் வெடித்து சிதறி,ஆச்சரியமும் ஆபத்தும் நிறைந்த ஆழ் கடல் சீற்றம்  கொண்டு சுனாமியாக சுழன்றடித்து,தென்றலாய்  வருடி செல்லும் காற்று பேய் பிடித்தார் போல் தானே,நீலம் என புயலாய் மாறி,இடி,மின்னலுடன் கூடிய பலத்த மழையுடன் வீசி,பல கோடி உயிரினங்களை தாங்கும் பூமி மாதா பொறுமை இழந்து பயங்கர கோபத்துடன் தன வாயை பிளந்து நில நடுக்கத்தை உண்டாக்கி........................அட போங்கையா பொசகெட்ட பயலுகளா...சாப்டது செரிக்கலைன்னா வத்தலப்பாக்கு போடு இல்லை பீடா வாங்கி நல்லா மொக்கு மொக்குன்னு மொக்கிட்டு போவியாம்...அத விட்டிட்டு..எரிமலை வெடிக்குது,சுனாமி சுழட்டுதுன்னு வெறும் வாய்ல வெட்டிக்கதை பேசிகிட்டு....

எங்க ஊரு மாமியாருக வீட்டுல இருக்கிற கேஸ்-ஸா விடவாடா எரிமலை வெடிக்க போகுது.சுனாமி என்னடா சுண்டக்கா சுனாமி..நாங்கலாம் சுனாமிக்குள்ள ஸ்விம்மிங்க போட்டவங்க.சுனாமிக்கு வெளிய சுண்டலை தின்னுறவைங்க.டேய்,நாங்கலாம் சுனாமியோட பினாமி டா..எங்ககிட்டயேவா....

ஆமா,அது என்ன நீலம்,சிவப்பு,பச்சைன்னு பேரு வைக்குறீங்க.அது என்ன புயலுக்கு வைக்குற பேரா இல்லை புது வீட்டுக்கு அடிக்கிற கலரா..அப்புறம் என்னது இடி,மின்னலுடன் கூடிய "பலத்த" மழை...வெறும் மழைக்கே வழிய காணோம்மா.இதுல பலத்த மழைன்னு பில்டப்பு வேற...வந்துட்டாலும் பாலாரும்,தேனாறும் பிச்சிகிட்டு  போகுது பாரு.குண்டும் குழியுமா இருக்கிற ரோட்ல ஆறும்,குளமாய் கிடக்கும்.கொசுவும்,நோயும் தேர்தல் நேர கட்சிகள் மாதிரி கூட்டணி போட்டுகிட்டு வழக்கம் போல மக்களை சந்தொஷபடுதும்...

கடசியா என்னமோ சொன்னாங்கலே,அஹ்,பூமி மாதா பொறுமை இழந்து பொங்குவாங்கலாமே ...அவங்க என்ன மனோகரா சிவாஜியா..பொருத்தது போதும்னு பொங்கி எழ..சோறு போடுற நிலத்தை கூறு போட்டு கூவி கூவி விக்கும்போது போது பொங்காத பூமி...கிரானைட்,தங்கம்,சாமி,அது இதுன்னு என்னனமோ மண்ணுக்குள்ள இருந்து எடுத்து எங்கெங்கேயோ வித்து ஊழல் பண்ணும்போது பொங்காத பூமி இனி பொங்குனா என்ன பொங்காட்டி என்ன.

அப்டியே இதெல்லாம் நடந்து உலகம் அழிய போகுதுனாலும் என்ன ஆகா போகுது..நாளைக்கே தேசிய நதி நீர் பிரச்சனை எல்லாம் சரியாக போகுதா இல்லை அந்நிய மமுதலீட்டை முற்றிலும் நீக்க போறாங்களா இல்லை தமிழ்நாட்டுல இருக்கிற அணைத்து கட்சிகளும் ஒன்னாகி எங்கள் நாட்டில் எல்லா நாளும் கார்த்திகை,எங்கள் தெருவில் இனி என்றும் பண்டிகைன்னு பாசப்பறவைகள் ஆகா போறாங்களா.அம்புட்டு ஏன்யா...அட்லீஸ்ட் தடையில்லா மின்சாரமாசும் வந்திட போகுதா..ஒன்னும் இல்லை.

என்னமோ உலகத்துல இருக்கிற எல்லாருக்கும் சேத்து வச்ச சொத்து கோடி கணக்குல இருக்கிற மாதிரி பீல் ஆரீங்கா.வாழும்போது தான் ஒற்றுமை இல்லை.கழுதை போகும்போதாசும் இருந்திட்டு போகட்டுமே.என்ன சொல்றீங்க.வந்தா கடன்,மின்சாரம்,ரேஷன்,ஸ்கூல் பீஸ்,வீட்டு வாடகைன்னு எதுவும் இல்லாம நிம்மதியா மொத்தமா போவோம்.இல்லைன்னா வழக்கம் போல கதையடிச்சிட்டு கடன்காரன் கழுவி ஊத்துறதை காது குளிர கேட்டுகிட்டே வாழ்க்கைய ஓட்டுவோம்..இதெல்லாம் பழக்க பட்டதுதானே..இதெல்லாம் பார்த்தா பொழப்பு நடத்ததான் முடியுமா இல்லை புரோட்டா திங்கதான் முடியுமா..ப்ரீயா விடு பாஸ்.

Comments

  1. என்னமோ உலகத்துல இருக்கிற எல்லாருக்கும் சேத்து வச்ச சொத்து கோடி கணக்குல இருக்கிற மாதிரி பீல் ஆரீங்கா.. elei nan ipo thaan serka aaramichurukken..

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

Kalaignar ShortFilm Contest

அம்மா (எ) உலகம்

நட்பின் காதல்