சென்னை - தாய் நகரம்

மதராசபட்டினம் என்ற மெட்ராஸ் என்கிற சென்னை.பல கோடி ஜனங்களின் இதய துடிப்பு.கனவை நிறைவேற்ற வாழ்பவர்க்கும்,கனவில் வாழ்பவர்க்கும் இடம் அளிக்கும் ஒரு வசந்த மாளிகை.

உலகெங்கும் பல நாடுகளில்,நகரங்களில் வெடிகுண்டும்,தீவிரவாதமும் தலை தூக்கி தாண்டவம் ஆடும் காலகட்டத்திலும் எந்த தொல்லையும் இல்லாம இருக்கும் ஒரே நகரம் சென்னை.

அதற்க்கு காரணம் ஒருவகையில் நம் அரசியல் தலைவர்கள் விடும் அறிக்கை குண்டுகள் கூட இருக்கலாம்.ஒருவர் மீதி ஒருவர் மாறி மாறி வீசும்போது கத்தி இன்றி,ரத்தம் இன்றி யுத்தம் ஒன்று நடக்குது என்ற முன்னோர் சொல்லே நினைவுக்கு வருகிறது(எதுக்கு சொன்னது எதுக்கு யூஸ் ஆகுது பாருங்க).

வயசு வித்தியாசமின்றி அணைத்து வயதினரும் வருகை புரியும் மெரினா கடற்கரையில் கடலும் கடலை சார்ந்த நிலபரப்பில் எந்த பரபரப்பும் இன்றி அடிக்கிற வெயிலிலும் அசராம ரொமேன்ஸ் பண்ணும் இளசுகள் ஒரு பக்கம்,கடலையே கடவுளாய் என்னும் மீனவ மக்கள் ஒரு பக்கம்.மண்ணிலும்,கடல் நீரிலும் விழுந்து புரண்டு உடையில் கறை கொண்டாலும்,உள்ளத்தில் கறை கொள்ளா குழந்தைகள் கூட்டம் ஒரு பக்கம்.அக்குழந்தைகளின் எதிர்காலத்தை எண்ணி கவலையும்,அவர்களின் சந்தோஷத்தை கண்டு மகிழ்ச்சியும் கொள்ளும் நடுத்தர மக்கள் ஒருபக்கம்.மீன்,சோடா,சுண்டல்,சமோசா என கடற்கரை விருந்தினரின் வயிற்றை நிரப்பி தன வாழ்வை நிரப்பும் இளம் தொழில் அதிபர்கள் என அணைத்து தரப்பினரும் தம் தடம் பதிக்கும் உலகின் இரண்டாம் பெரிய கடற்கரை.

ஸ்பென்சர்,அல்சா மால்,எக்ஸ்பிரஸ் அவன்யு,சிட்டி சென்டர்,க்ளோபஸ்,பாண்டி பஜார் என பொருட்கள் பல வாங்கவும்,படங்கள் பார்க்கவும் என சுற்றி பார்க்க பல இடங்கள் உள்ளன.அங்கே வெறும் சுற்றி மட்டும் பார்க்க ஒரு கூட்டமும் உள்ளன.அவற்றில் நானும் ஒருவன்.

கனவுலகாம் கலை உலகின் இருப்பிடமாய் திரியும் கோடம்பாக்கம்,வடபழனி யில் தான் எத்தனை படைப்பாளிகள்,அந்த படைப்பாளிகளின் படைப்பை திருடி பொழப்பை ஊட்டும் பெருச்சாளிகள் என மாற்றம் தேடி ஏமாற்றத்தோடு ஏற்ற,இறக்கங்கள் நிறைந்த ஒரு தனி உலகம்.

தமிழகத்தின் தலைநகரில் ஆங்கிலத்தையே ஆணிவேராய் கொண்டு ஆட்சி புரியும் வெள்ளையர்களின் தொழில்நுட்ப பூங்காக்கள்.அதில் வாட்ச்மன் ஆக பணி புரிய கூட வடமாநில குர்காக்கள்.தமிழன் நிலை தகதிமிதோம் ஆடுகிறது.இருப்பினும் அரசியல்வாதிகளின் மேடை பேச்சிலும்,கவிஞர் பெருமான்களின் கருத்தரங்குகளிலும் தமிழ் உயிர் வாழ்ந்து,சில சமயம் தரம் தாழ்ந்தும்,பேசுவோரை வாழ வைக்கிறது.

நாட்டுபுற,கானா கச்சேரிகளுக்கு கூடும் கூட்டம் கூட நாரத கான சபை கச்சேரிகளுக்கு கூடுவதில்லை.இருந்தும் பரதம்,கதக்,குச்சிபுடி போன்ற பலவகை நடனங்களில் ஆர்வம் உள்ளோருக்கு குறைவில்லை.அவர்களின் ஆர்வத்துக்கும் குறைவில்லை.பாட்டு,நடனம்,நடிப்பு என பல் வகைகளில் மாணவர்கள் திறமை மேம்பட்டாலும்,பாட புத்தகத்தில் கவனம் குறைவதால் பகுத்தறிவு பயனற்று போகிறது.இருப்பினும் தைரியமும்,நம்பிக்கையும் தரும் அனுபவ படிப்பு சென்னையில் அளவில்லாமல் கிடைப்பதால் எத்தகைய குறையும் நிறையாய் மாற்றும் வல்லமை மாணவர்களுக்கு கிடைக்கும்.சமிப காலமாக குழந்தைகள் படிப்போடு,பாதுகாப்பும் கேள்விக்குறி ஆவது வருத்தத்திற்குரிய விஷயம்.

தமிழர்களுக்கு உலகெங்கிலும் அநீதிகள் இழைக்கபட்டாலும் தமிழர்களின் தலைநகரம் ஆனா சென்னையில் அண்டை மாநிலத்தார் முதல் அயல்நாட்டினர்varai வேலைக்காகவும்,சுற்றுலாக்க்காகவும் வந்து எந்த வித பயமும் இன்றி தங்கள் வாழ்வை அனுபவிக்கின்றனர்.

பல மாடி கட்டிடமும்,வண்ணமிகு விளக்கொளியுமாய் நாகரிக வாழ்க்கை ஒரு பக்கம்.ஓட்டை ஊடிசளும்,ஊளை குடிசையுமாய்,நிலையில்லா மின்சாரத்துடன் இருண்ட பிரதேசமாய் சேரி புறங்கள ஒரு பக்கம்.கூந்தல் முதல் கூச்சம் வரை,ஆடை முதல் ஆசை முதல் அனைத்திலும் மாற்றம் கண்டாலும் மனதளவில் கலாச்சாரத்தை போற்றும் பண்பு நிறைந்த ஆண்-பெண் மக்கள் தொகை இன்னும் ஓரளவு மிஞ்சி இருப்பது சிங்கார சென்னை என்ற சொல்லுக்கு சிறிதளவேனும் அர்த்தம் தருவதாகும்.

இங்கு பிறர் உழைப்பை திருடும் உயர்மட்ட வர்கத்தினர் இருந்தும் தங்கள் உழைப்பை நம்பியே வாழ்க்கையை ஓட்டும் நடுத்தர மற்றும் கடைநிலை வர்க்கம் முதல் அனைவருக்கும் அவர்தம் வாழ்க்கையை வாழ வழிகள் உண்டு.

அயல்நாட்டினை கண்டு அழிந்து போகும் கலாச்சாரம் வந்தாலும்,அந்த அயல்நாட்டினரே கண்டு அசரும் பாரம்பரியம மிக்க பன்மையான தொன்மையான சென்னை எத்தரப்பிற்கும் பொதுவாகி தமிழர்களின் உயிராகி என்றும் அழியா புகழ் கொண்டு வாழ  இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.

Comments

Popular posts from this blog

Kalaignar ShortFilm Contest

அம்மா (எ) உலகம்

நட்பின் காதல்